மின்சார நெருக்கடிக்கு ரவி கருணாநாயக்க மாத்திரம் காரணமல்ல – டளஸ் அழகப்பெரும

நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடிக்கு அமைச்சர் ரவி கருணாநாயக்கவை மாத்திரம் குற்றஞ்சுமத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் பதவிக்கு வந்து மிகக் குறுகிய காலமே பூர்த்தியடைந்துள்ள நிலையில், தற்போதை இந்நிலைக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முழு அரசாங்கமும் பொறுப்பேற்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

அத்துடன் நாட்டின் இலவசக் கல்விக்கான அங்கீகாரத்தை தற்போதைய அரசாங்கம் மிக மோசமான நிலைக்குக் கொண்டு சென்றுள்ளது. கைதிகளைத் தூக்கிலிடுவதற்கான அலுக்கோசு பதவிக்கான நேர்முகத்தேர்வில் பட்டதாரி ஒருவரும் கலந்துகொண்டிருக்கின்றார். வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு உரிய வேலைவாய்ப்புப் பெற்றுக் கொடுக்கப்படாமையினாலேயே இத்தகையதொரு நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!