இனவாதத்தை வெளியிடுகிறார் ஜனாதிபதி!

?????????????????????????????????????????????????????????
ஜெனிவா தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கருத்தானது கடுமையான இனவாத கண்ணோட்டத்தைக் கொண்டது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்தார். நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்க வேண்டிய ஜனாதிபதி அண்மையில் பேசிய பேச்சுக்கள் இந்த நாட்டிலே ஒரு கடுமையான இனவாதத்தை வெளியிட்டதாகவே என்னால் உணர முடிகின்றது. மைத்திரிபால சிறிசேனவிற்கு மக்கள் விருப்போடு வாக்களித்தார்கள். அவர் நல்லதைச் செய்வார். பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு இவர் ஒரு நீதியை வழங்குவார். நிலைமாறு கால நீதிப்பொறியின் நான்கு தூண்களையும் இவர் நிமிர்த்தி பிடிப்பார் என்ற எண்ணங்களை எல்லாம் கொண்டுதான் தமிழர்கள் அவருக்காக வாக்களித்தார்கள். எனினும் ஜனாதிபதியின் செயற்பாடுகள் தற்போது கவலையளிக்கும் வகையில் அமைந்துள்ளது. என குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!