பாகிஸ்தான் சிறைகளிலுள்ள 100 இந்திய மீனவர்கள் விடுவிப்பு

பாகிஸ்தான் சிறைகளிலுள்ள 100 இந்திய மீனவர்கள் நாளை ஞாயிற்றுக்கிழமை விடுவிக்கப்படுவார்கள் என பாகிஸ்தான் அரச அதிகாரிகள் இந்திய அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

விடுவிக்கப்படும் மீனவர்கள் வாகா எல்லையில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவர் எனவும் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானில் உள்ள 385 இந்திய மீனவர்களையும், 10 கைதிகளையும் விடுவிக்குமாறு டில்லிலுள்ள பாகிஸ்தான் உயர் ஆணையகத்திடம் இந்திய அரசு அண்மையில் விடுத்த கோரிக்கையை தொடர்ந்து பாகிஸ்தான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தான் சிறைகளில் 385 இந்திய மீனவர்கள் உள்ளனர். அவர்களையும் அவர்களது படகுகளையும் விரைவில் இந்தியாவுக்கு கொண்டு வர அவசர நடவடிக்கைக்கள் எடுக்கப்பட்டுள்ளது. என இந்திய வெளிவிவகாரக அமைச்சு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

இம்மாதத்தில் மொத்தம் 360 கைதிகளை இந்தியாவிடம் ஒப்படைக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது எனவும் வாரத்திற்கு 100 கைதிகள் என்ற அடிப்படையில் ஏப்பரல் 29 ஆம் திகதி அனைத்து கைதிகளும் ஒப்படைக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!