இந்திய- சிறிலங்கா பாதுகாப்பு கலந்துரையாடல் – ஒத்துழைப்பு விரிவாக்கம் குறித்து ஆலோசனை

ஆறாவது கட்ட இந்திய – சிறிலங்கா பாதுகாப்பு கலந்துரையாடல் நேற்று கொழும்பில் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது.

இந்திய பாதுகாப்பு செயலர் சஞ்சய் மித்ரா தலைமையிலான இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் குழுவும், சிறிலங்கா பாதுகாப்பு செயலர் ஹேமசிறி பெர்னான்டோ தலைமையிலான குழுவினரும் இந்தப் பேச்சுக்களில் கலந்து கொண்டனர்.

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்புத் தொடர்பாக மீளாய்வு செய்வதற்காகவும், புதிய பரப்பில் ஒத்துழைப்புகளை விரிவுபடுத்திக் கொள்வதற்காகவும் இந்த பாதுகாப்புக் கலந்துரையாடல் 2012ஆம் ஆண்டு தொடக்கம், ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது.

நேற்றைய இருதரப்பு பாதுகாப்பு கலந்துரையாடலில், இரண்டு நாடுகளுக்கும் பொதுவான, பரஸ்பர பாதுகாப்பு நலன்கள் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பாக நீண்ட பேச்சுக்கள் நடத்தப்பட்டன.

இதில், சிறிலங்காவுக்கான இந்திய துணை தூதுவர் அரிந்தம் பக்ஷி, சிறிலங்காவின் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, இராணுவ மற்றும் கடற்படைத் தளபதிகள், விமானப்படை தலைமை அதிகாரி, மற்றும் மூத்த பாதுகாப்பு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!