சித்திரவதைகளுக்கு உத்தரவிட்டவர் கோத்தாவே! – யஸ்மின் சூக்கா

சித்­தி­ர­வதை செய்­வ­தற்­கான உத்­த­ர­வு­கள் அனைத்­தும் முன்­னாள் பாது­காப்­புச் செய­லர் கோத்­த­பாய ராஜ­பக்­ச­வினால், வழங்­கப்­பட்­ட­து என்று உண்மை மற்­றும் நீதிக்­கான அமைப்­பின் பணிப்­பா­ளர் யஸ்­மின் சூக்கா தெரி­வித்­துள்­ளார்.

கோத்­த­பா­ய­வுக்கு எதி­ராக வழக்கு தாக்­கல் செய்­த­மையை அறி­விக்­கும் ஊட­க­வி­ய­லா­ளர் சந்­திப்­பு லண்­ட­னில் இடம்­பெற்­றது. இங்கு கருத்து தெரி­விக்­கும்­போதே யஸ்­மின் சூக்கா இவ்வாறு தெரி­வித்­துள்­ளார்.

ஊடக சந்­திப்­பில் வழக்­கைத் தாக்­கல் செய்த ரோய் சமா­தா­னம் மற்­றும் பிர­பல சட்­டத்­த­ரணி ஸ்கொட் கிள்­மரே ஆகி­யோர் கலந்­து­கொண்­ட­னர்.

இங்கு கருத்­துத் தெரி­வித்த சூகா, முன்­னாள் பாது­காப்­புச் செய­லர் கோத்­த­பாய மீது தற்­போது நாம் வழக்கு தொடர்­வ­தற்கு இது சிறந்த சந்­தர்ப்­ப­மாக காணப்­ப­டு­கின்­றது. சித்­தி­ர­வதை செய்­வ­தற்­கான உத்­த­ரவு மற்­றும் கட்­ட­ளை­கள் அனைத்­தும் கோத்­த­பாய ராஜ­பக்­ச­வால் வழங்­கப்­பட்­டுள்­ளது. இந்­தச் செயற்­பா­டு­க­ளுக்கு கோத்­த­பாய சட்­ட­பூர்­வ­மாக பொறுப்­புக் கொண்­ட­வர்.

பாது­காப்­புப் படை­யி­ன­ரின் கட்­டுப்­பாட்டை மைய­மா­கக் கொண்­டி­ருந்­த­தாக பல ஆண்­டு­க­ளாக கோத்­த­பாய தனது பகி­ரங்க அறிக்­கை­க­ளில் தெளி­வு­ப­டுத்­தி­யுள்­ளார்.இந்­தச் சம்­ப­வங்­கள் ஐ.நா. சபை­யால் ஆவ­ணப்­ப­டுத்­தப்­பட்டு அறி­விக்­கப்­பட்­ட­து­டன் இலங்கை அரசு இந்­தக் குற்­றச்­சாட்­டுக்­களை மீண்­டும் மீண்­டும் எதிர்­கொண்­டது.
பாது­காப்­புச் செய­லர் என்ற ரீதி­யில் இந்த முறை­கே­டு­கள் நடை­பெற்­றதா அல்­லது சரி­யான முறை­யி­லேயே செயற்­பட்­டார்­களா என்று நன்கு அறிந்­தி­ருந்­தார். ஆனால் அவர் குற்­ற­வா­ளி­களை விசா­ரணை செய்ய அல்­லது தண்­டிக்க சட்ட நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வில்லை. முன்­னாள் பாது­காப்­புச் செய­லர் கோத்­த­பாய ராஜ­பக்ச அமெ­ரிக்­கா­வில் இருக்­கும் தரு­ணத்­தில் அவர் மீதான குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு எதி­ராக வழக்­குத் தாக்­கல் செய்­வ­தற்கு சிறந்த வாய்ப்பு கிட்­டி­யுள்­ளது என்­றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!