பிரதமரின் சூழ்ச்சியே தேர்தல் தள்ளிப்போக காரணம் – எஸ்.பி. சாடல்

மாகாணசபை தேர்தலை தொடர்ந்து பிற்போடும் சூழ்ச்சிகளை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே வகுப்பதாக குற்றம் சாட்டிய பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க, மக்களின் தேர்தலை உரிமை தொடர்ந்து மீறப்படுவதை கருத்திற் கொண்டு இம்முறை மாத்திரம் பழைய முறையில் தேர்தலை நடத்த நாங்கள் இணக்கம் தெரிவித்தோம். ஆனால் மாகாண சபை தேர்தலை நடத்த எவ்வித முன்னேற்றகரமான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டார்.

தற்போது 07 மாகாண சபைகளின் பதவி காலம் முடிவடைந்துள்ள நிலையில் இம்மாத இறுதி பகுதியில் மேல்மாகாண சபையின் பதவி காலமும் நிறைவுப்ப பெறும். எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கையினை மீளாய்வு செய்ய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் குழு நியமிக்கப்பட்டது.

இரண்டு மாத காலத்திற்குள் எல்லை நிர்ணய மீளாய்வு தொடர்பிலான அறிக்கையினை சமர்ப்பிக்க வேண்டும் என்று பணிக்கப்பட்டுள்ள நிலையில் இதுரை காலமும் எல்லை நிர்ணயம் தொடர்பிவ் அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை. இதற்கு பிரமரின் பொறுப்பற்ற செயற்பாடுகளே காரணம் எனவும் சுட்டிக்காட்டினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!