பேச்சுக்குத் தடையாக இருக்கிறார் பீரிஸ்!

எதிர்காலத்தில் நடத்தப்பட உள்ள எந்த தேர்தலிலும் விரிவான கூட்டணியாக போட்டியிடுவது தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்தும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

‘எதிர்வரும் 10 ஆம் திகதியும் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதால், அதில் எந்த தோல்வியும் இல்லை ஜனாதிபதித் தேர்தல் அல்லது நடைபெறவுள்ள தேர்தலை இலக்கு வைத்து பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. கூட்டணியாக போட்டியிட எதிர்பார்த்துள்ளோம்.இந்த பேச்சுவார்த்தைக்கு ஜீ.எல்.பீரிஸ் கருத்து தடையாக இருந்தாலும் பொறுமையாக முன்னோக்கி செல்வதாகசெல்வதாகவும் இணைந்தால் வெற்றி பெற முடியும் எனவும் இல்லை என்றால் தோல்வி நிச்சயம் எனவும் மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!