சூடானில் மகிழ்ச்சி அச்சமாக மாறியது- ஜனாதிபதியை பதவி நீக்கி ஆட்சியை கைப்பற்றியது இராணுவம்

முப்பது வருட ஆட்சிக்கு பின்னர் சூடான் ஜனாதிபதி ஓமர் அல் பசீர் பதவியிலிருந்து அகற்றப்பட்டதால் மக்கள் மத்தியில் ஏற்பட்ட மகிழ்ச்சி இராணுவம் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளதை தொடர்ந்து அச்சநிலையாக மாறியுள்ளது

சூடான் ஜனாதிபதி ஓமர் அல் பசீர் இராணுவத்தினால் பதவியிலிருந்து அகற்றப்பட்டதை கொண்டாடுவதற்காக வீதியில் இறங்கிய மக்கள் தற்போது அதிகாரத்திலிருக்க முயலும் இராணுவ அதிகாரிகளிற்கு எதிராக நீண்ட போராட்டத்தை எதிர்கொள்ளவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்

ஓமர் அல் பசீர் பதவியிலிருந்து அகற்றப்பட்ட பின்னர் சூடானை நிர்வகிப்பதற்காக இராணுவத்தினர் நிர்வாக குழுவொன்றை உருவாக்கியுள்ளனர்.

குறிப்பிட்ட இராணுவ பேரவை அரசாங்கத்தை கலைத்துள்ளதுடன் நாட்டின் அரசமைப்பை இடைநிறுத்தியுள்ளதுடன் மூன்றுமாதகால அவசரநிலையை அறிவித்துள்ளது.

சூடான் இராணுவம் ஆட்சிமாற்றம் உரிய முறையில் இடம்பெறுவதை உறுதி செய்வதற்காக அடுத்த மூன்று வருடங்களிற்கு நாட்டின் நிர்வாகத்தை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கப்போவதாக அறிவித்துள்ளது

இதனை தொடர்ந்து தங்கள் ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்கப்போவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்

சூடான் ஜனாதிபதிக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களி;ற்கு தலைமைதாங்கிய சூடானின் தொழிலசார் அமைப்பின் பேச்சாளர் இராணுவத்தின் இ;ந்த அறிவிப்பை நிராகரித்துள்ளார்

அடுத்த இரண்டுவருடங்களிற்கு இராணுவம் நாட்டை ஆளப்போகின்றது என்ற அறிவிப்பை நாங்கள் நிராகரிக்கின்றோம் என தெரிவித்துள்ள சூடானின் தொழிலசார் அமைப்பின் பேச்சாளர் ஓமர் அல் பசீரின் ஆட்சியே தொடர்கின்றது நான்கைந்து பேர் மாத்திரம் மாற்றப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்

சூடானின் இராணுவ தலைமையகத்திற்கு முன்னாள் பல வாரங்களாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் ஊரடங்கு உத்தரவையும் மீறி தொடர்ந்தும் அங்கு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார்

நாங்கள் துப்பாக்கிகளையும் ஊரடங்கு உத்தரவுகளையும்முன்னரும் பார்த்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!