நான்காவது தடவையாகவும் அதிபரானார் புடின்!!

ரஷ்யாவில் அதிபராக விளாடிமிர் புடின் இன்று பதவியேற்றுள்ளார்.
அடுத்த 6 வருடங்களுக்கு ரஷ்ய அதிபராகப் புடின் பதவி வகிக்கவுள்ளார்.

65 வயதான விளாடிமிர் புடின் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் 76 வீத வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியமை குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியுடன் 18 வருடமாக அவர் வகித்து வந்த நாட்டின் தலைவர் பதவியை தொடரவுள்ளார்.

எனினும் புடினுக்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா முழுவதும் 19 நகரங்களில் கண்டனப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. 19 நகரங்களில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற சுமார் ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து, அந்த நாட்டில் அமைதியற்ற சூழ்நிலை காணப்பட்ட போதிலும், தலைநகர் மொஸ்கோவில் இவரது பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றது

ரஷ்ய அதிபராக . 2000 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை முதலாவது தடவையாகவும், 2004 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை இரண்டாவது தடவையாகவும் புடின் அதிபராகப் பதவி வகித்திருந்தார்.

ரஷ்யாவின் அரசமைப்புச் சட்டத்தின் மூலம் மூன்றாவது தடவையாக புடின் அதிபராகப் பதவியேற்க முடியாத நிலையிருந்தது. இதனையடுத்து, கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டுவரை அவர் தலைமை அமைச்சர் பதவி வகித்திருந்தார்.

இதனையடுத்து, கடந்த 2012 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட அதிபர் தேர்தலில் புட்டின் மீண்டும் வெற்றி பெற்றிருந்தார். கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டுவரை மூன்றாவது தடவையாக அவர் அதிபராகப் பதவி வகித்து வந்தார். தற்போது நான்காவது தடவையாகவும் அதிபர் தேர்தலில் புடின் பெரும் வெற்றியைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!