தாக்குதலுக்கு பொறுப்பேற்று பதவி விலகமாட்டேன்! – ஜனாதிபதி

தொடர் குண்டு தாக்குதல் சம்பவங்களுக்குப் பொறுப்பேற்று ஒருபோதும் தாம் பதவிவிலகப் போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார் வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கி நேர்காணலிலேயே மைத்திரிபால சிறிசேன இதனை குறிப்பிட்டுள்ளார்.

“தாக்குதலை தடுக்க முடியாமல் போனமையையிட்டு மிகவும் கவலையடைகின்றேன். ஆனாலும் குறித்த சம்பவங்களுக்கு காரணமானவர்களுக்கு எதிராக பல நடவடிக்கைகளை தற்போது எடுத்து வருகின்றோம். இத்தகைய சம்பவங்கள் வேறு நாடுகளில் இடம்பெற்றபோது அந்நாட்டு தலைவர்கள் எவரும் அதற்கு பொறுப்பேற்று பதவி விலகியதில்லை. ஆகையால் நானும், இந்த தாக்குதல் சம்பவங்களை பொறுப்பேற்று பதவிவிலக போவதில்லை” என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!