பிரிவுகளை உருவாக்குபவர்களின் தலைவர் மோடி – அமெரிக்கா இதழ் கண்டனம்!

இந்தியாவில் பிளவுகளை உருவாக்குவோரின் தலைவர் என பிரதமர் மோடியை அமெரிக்கா இதழ் கிண்டலடித்துள்ளது. அந்நாட்டின் பிரபல இதழான டைம்ஸ், 2 கோடிக்கும் அதிகமான வாசகர்களை கொண்டுள்ளது. 2014, 2015, 2017-ம் ஆண்டுகளில் உலகின் 100 சக்திவாய்ந்த மனிதர்கள் பட்டியலில் பிரதமர் மோடியை தேர்ந்தெடுத்து டைம்ஸ் கவுரவப்படுத்தியது. இந்நிலையில் இப்போது மோடியின் வரைபடத்தை அட்டையில் வெளியிட்டுள்ள டைம்ஸ், அவரை,பிளவுகளை உருவாக்குவோரின் தலைவர் என்றும், இன்னும் 5 ஆண்டுகளுக்கு மோடியின் ஆட்சியை இந்தியா சகித்துக் கொள்ளுமா என்றும் கிண்டலடித்துள்ளது.

மேலும் ஜனநாயக நாடான இந்தியா, பிரதமர் மோடி அரசாங்கத்தில், மதங்களால் பிரிக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டு கட்டுரையும் வெளியாகியுள்ளது. ஆதீஷ் தஸீர் என்பவர் எழுதியுள்ள இந்த கட்டுரையில், இந்தியாவின் மதச்சார்பின்மை, பத்திரிகை சுதந்திரம் ஆகியவை மோடியின் ஆட்சிக் காலத்தில் சிதைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!