விஷவாயுத் தாக்குதல் நடக்குமா?- பீதியூட்டுகிறார் மஹிந்த

விஷவாயுத் தாக்குதல் நடக்கலாமென்று ஒரு கதை உலவுகிறது. அரசு உண்மையை சொல்ல வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.

“ திங்கட்கிழமை பாடசாலை ஆரம்பமென அரசு அறிவித்துள்ளது. ஆனால் அன்று தாக்குதல்கள் நடக்கலாம் என்று புலனாய்வுத்துறை சொல்கிறது. மறுபக்கம் விஷவாயு தாக்குதல் நடக்கலாமென ஒரு தகவல் நேற்று உலாவியது. உண்மையில் என்ன தான் நடக்கிறது?

நான்கு மில்லியன் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது எமது கடமை. இந்த சம்பவங்கள் குறித்து விசாரணைகளை நடத்தும் பாதுகாப்புத் தரப்புக்கு அரசியல் தலையீடுகள் எதுவும் இருக்க கூடாது. குற்றம் செய்தவர்கள் கட்டாயம் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும்.

சிறுவர்களுக்கான பாடசாலைகளை ஆரம்பிக்க முன்னர் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து அரசு ஒரே குரலில் சொல்ல வேண்டும் . அரசின் மீதான சந்தேகத்தினாலேயே இன்னமும் பெற்றோர் பாடசாலைகளுக்கு பிள்ளைகளை அனுப்பாமல் இருக்கின்றனர். நாட்டின் இந்த பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டுமென முஸ்லிம்களும் விரும்புகின்றனர். அதனை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!