இந்தியாவில் பயங்கரம் ; பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட அரசியல்வாதியின் குடும்பத்தினர்

இந்தியாவின் அருணாசலம் பிரதேசத்தில் சட்டமனற உறுப்பினர் ஒருவரனின் குடும்பத்தினர் 11 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றுள்னர்.

அருணாசாலம் மாநிலம் மேற்கு கோன்சா தொகுதி தேசிய மக்கள் கட்சியின் 56 வயதுடைய சட்டமன்ற உறுப்பினர் எல்.ஏ.திரோங் அபோ என்பவரின் குடும்ப உறுப்பினர்களே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

இவரது வீடு திரப் மாவட்டம் போபனி எனும் சிறிய கிராமத்தில் உள்ளது. இந் நிலையில் நேற்றுக் காலை திரோங் அபோ தனது குடும்பத்தினருடன் வீட்டிலிருந்தார். அப்போது அங்கு திடீரென வந்த பயங்கரவாதிகள் வீட்டிலிருந்தவர்களை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.

இந்தக் கொடூர தாக்குதலில் திரோங் அபோ அவருடைய மகன் மற்றும் அவரது குடும்பத்தினர் உட்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதன் பின்னரும் கொலை வேறியடங்காத பயங்கரவாதிகள் அவரது காருக்கும் தீ வைத்தனர்.

திரோங் அபோவின் பாதுகாவலர் படுகாயத்துடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த சம்பவம் குறித்த பிரதேச்தில் சோகத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த தாக்குதலின் பின்னணியில் நாகலாந்து சோசலிஷ் கவுன்சில் எனும் இயக்கத்தின் பயங்கரவாதிகள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!