‘டே ஸீரோ’ பட்டியலில் இந்தியா..! சென்னை தப்பிக்குமா?

இப்படியான ஒரு வார்த்தையை நீங்கள் அறிந்துள்ளீர்களா? நாம் அறிந்து கொள்ள கூடிய தருணம் வந்துவிட்டது. நம் வீட்டில் ஒரு நாள் தண்ணீர் இல்லையென்றனல் நாம் படும் அவஸ்தையை சொல்ல வார்த்தை இல்லை. அதே 10 நாட்களுக்கு தண்ணீர் இல்லையென்றால் நாம் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. ஒருவேலை அனைத்து நீர் ஆதாரங்களும் வற்றிப்போய்விட்ட வாழ்வாதாரம் என்றால் அது தான் Dayzero. Dayzero என்பது தண்ணீர் பஞ்சத்தின் உச்சகட்ட நிலை.

DayZero-வை சந்தித்த முதல் நாடு:

இதை சந்தித்த முதல் நாடு தென் ஆப்பிரிக்காவில் உள்ள (capetown) என்ற நகரம் தான். நாட்டின் கட்டமைப்பு எவ்வளவு பெரிதாக இருந்தாலும் குடிக்க தண்ணீர் இல்லையெனில் நாடு மிக மோசமான நிலையை சந்திக்கும். அதற்கு உதாரணம் தான் Capetown. இன்றும் தண்ணீர் பஞ்சத்தால் கடல் நீரை குடிநீராக மாற்றி ஒரு நபர் ஒரு நாளைக்கு 50 லிட்டர் தண்ணீர் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது அந்நாட்டின் விதிமுறைகளில் ஒன்று. நினைத்து பாருங்கள் நாம் ஒருவேளை குளிக்கும் தண்ணீரின் அளவு கூட 50 லிட்டருக்கும் அதிகம்.

DayZero பட்டியலில் இந்தியா..!

சரி நாம் ஏன் இப்போது இதை பேசவேண்டும் என்று கேட்கீறீர்களா ? #Dayzero நம்மையும் நேருங்கிக்கொண்டிருக்கிறது. அந்த அபாய நிலையை நாம் தொட்டுவிட்டோம் என்பதே உண்மை. ஆம் ஐநா அறிவித்த Dayzero பட்டியலில் இந்தியாவும் ஒன்று.

பெங்களூர் தான் அடுத்த DayZero:

இந்தியாவில் உள்ள பெங்களூரு (Bangalore) தான் Dayzero சந்திக்க போகும் அடுத்த நகரம் என்று கூறியிருக்கிறார்கள் அதற்கு காரணம் அங்கு வேகமாக வளர்ந்து வரும் தொழிற்சாலைகள். அந்த நகரத்தின் நீர்நிலைகள் முழுவதும் மாசுவால் நிறைந்துள்ள காரணத்தினால் நீர் நிலைகள் அனைத்தும் வற்றிப்போய்விட்டது. இதனை தவிர்க்க அரசு பல வழிகளை செய்தாலும் இந்த நிலை இன்னும் நீடித்தால் இன்னும் சில ஆண்டுகளில் பெங்களூரு Dayzero சந்திப்பது உறுதி என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

சென்னை தப்பிக்குமா?

இதில் Dayzero சென்னையையும் விட்டுவைக்கவில்லை இப்பொழுது உள்ள நீர் ஆதாரங்களை வைத்து சமாளித்து கொண்டிடுக்கிறது சென்னை. சென்னை குடிநீர் வாரியம் சில கட்டுப்பாடுகளை சென்னை வாசிகளுக்கு விதித்துள்ளது. தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும், தண்ணீரை சேமிக்க வேண்டும் என பல நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

தப்பிப்பது எப்படி?

தண்ணீர் பற்றாக்குறை என்பது நம் நாட்டு மக்களுக்கு கோடை காலங்களில் மிக பெரிய சவாலாக தான் உள்ளது. மழை காலங்களில் தனிநபர் வீடுகளில் நீரை சேமிப்பதும், மரங்களை அதிக அளவில் வளர்ப்பதும், இந்நாட்டை தண்ணீர் பற்றாகுறையிலிருந்து காப்பாற்ற கூடிய வழி என்று சொன்னால் அது மிகையல்ல.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!