புலனாய்வு அதிகாரிகளின் உயிருக்கு ஆபத்து – மகிந்த

நாடாளுமன்றத் தெரிவுக்குழு விசாரணைகளில் அளிக்கப்படும் சாட்சியங்களினால், புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளின் உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடாது என்று எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச கோரியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், ‘புலனாய்வு அதிகாரிகள் தெரிவுக்குழுவினால் சாட்சியமளிக்க அழைக்கப்படும் போது, அவர்களின் அடையாளங்கள் வெளிப்படுத்தப்படும்.

இது மிலேனியம் சிற்றி சம்பவம் போன்று உள்ளது. இதனால் அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.“ என்று தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்து பேசிய அவை முதல்வர் லக்ஸ்மன் கிரியெல்ல, தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய, இரகசியமான தகவல்களை வெளிப்படுத்த வேண்டாம் என்று தெரிவுக் குழுவின் தலைவரிடம் கேட்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

விமானப்படைத் தலைமை அதிகாரியாக சுதர்சன பத்திரன

சிறிலங்கா விமானப்படையின் தலைமை அதிகாரியாக, உயர் வைஸ் மார்ஷல் சுதர்சன பத்திரன நியமிக்கப்பட்டுள்ளார்.

சிறிலங்கா விமானப்படைத் தளபதி எயர் மார்ஷல் சுமங்கல டயஸ் அவருக்கான நியமனத்தை நேற்று வழங்கினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!