அமெரிக்கா வழங்கிய போர்க்கப்பல் நாளை சிறிலங்கா கடற்படையில் இணைப்பு

அமெரிக்காவிடம் இருந்து பெறப்பட்டுள்ள சிறிலங்கா கடற்படையின் மிகப் பெரிய போர்க்கப்பலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாளை ஆணையிட்டு கடற்படையில் இணைத்துக் கொள்ளவுள்ளார்.

அமெரிக்க கடலோரக் காவல்படையில், USCG Sherman என்ற பெயருடன் இயங்கிய, போர்க்கப்பல், மறுசீரமைப்புச் செய்யப்பட்ட பின்னர் சிறிலங்கா கடற்படைக்கு கொடையாக வழங்கப்பட்டது.

இந்தக் கப்பல் கடந்த மாதம் 12ஆம் நாள், கொழும்பு வந்து சேர்ந்தது. சிறிலங்கா கடற்படையில் P 626 என்ற இலக்கத்துடன் இணைக்கப்பட்டுள்ள இந்தப் போர்க்கப்பல் நாளை சிறிலங்கா அதிபரால் ஆணையிடப்பட்டு, இயக்கி வைக்கப்படும்.

இதுவே சிறிலங்கா கடற்படையில் உள்ள மிகப் பெரிய போர்க்கப்பலாகும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!