வடக்கு இளை­ஞர்­க­ளுக்கும் ராணு­வத்­தில் சேர அழைப்பு

இரா­ணுவ வேலை­யும் ஓர் அரச வேலை­தான். எனவே வடக்கு இளை­ஞர்­க­ளும் இரா­ணு­வத்­தில் இணைந்து இந்த நாட்­டுக்­குச் சேவை­யாற்ற முன்­வ­ர­வேண்­டும்.
இவ்­வாறு யாழ்ப்­பாண மாவட்ட இரா­ணு­வக் கட்­ட­ளைத் தள­பதி மேஜர் ஜென­ரல் தர்­சன ஹெட்­டி­யா­ராச்சி தெரி­வித்­தார்.

சிங்­கள டிப்­ளோ­மாக் கற்­கை­நெ­றி­யைப் பூர்த்தி செய்த 600 மாண­வர்­க­ளுக்­கான சான்­றி­தழ் வழங்­கும் நிகழ்­வில் கலந்து கொண்­ட­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார் என்று இரா­ணு­வக் கட்­ட­ளைத் தள­ப­தி­யின் ஊட­கப் பிரிவு அனுப்பி வைத்­துள்ள செய்­திக் குறிப்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அதில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது; வடக்கு மக்­கள் மிக­வும் புத்­தி­சா­லி­கள். நல்­ல­வர்­கள். எனி­னும் கடந்த 30 வரு­டப் போர் வடக்கு மக்­க­ளை­யும் தெற்கு மக்­க­ளை­யும் சற்­றுப் பிரித்து விட்­டது.

தெற்­குச் சிங்­கள மக்­கள் வடக்­குத் தமிழ் மக்­கள் மீது நல்ல அபிப்­பி­ரா­யம் கொண்­ட­வர்­க­ளா­கவே இருக்­கி­றார்­கள். 30 வரு­டங்­க­ளுக்கு முற்­பட்ட காலத்­தில் வடக்­

கில் மின்­சா­ரம் இல்­லாத நிலை­யில்­கூட வடக்­கி­லி­ருந்து சிறந்த மருத்­து­வர்­கள், பொறி­யி­ய­லா­ளர்­கள் உரு­வா­கி­யி­ருந்­தார்­கள். தற்­போ­தைய இளை­ஞர் யுவ­தி­க­ளுக்­கும் நான் ஒன்­றைக் கூற­வி­ரும்­பு­கின்­றேன்.

இரா­ணு­வத்­தைச் சிங்­கள இரா­ணு­வம் என எண்­ணா­தீர்­கள் இரா­ணுவ வேலை­யும் ஓர் அரச வேலை­தான் என்றார். இவ்­வாறு அந்­தச் செய்­திக் குறிப்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!