மைத்திரியும் வெளிநாடு பறக்கிறார் – தலைவர்கள் இல்லாத நிலையில் சிறிலங்கா

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இரண்டு நாட்கள் அதிகாரபூர்வ பயணமாக நாளை தஜிகிஸ்தானுக்குச் செல்லவுள்ளார்.

தஜிகிஸ்தான் நாட்டின் தலைநகர் டுஷான்பே நகரில் நடைபெறும், ஆசியாவில் பரஸ்பர நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் தொடர்பான கருத்தரங்கில் பங்கேற்கவே சிறிலங்கா அதிபர் இந்தப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

இந்த ஆண்டு 15 ஆவது முறையாக இந்த மாநாடு நடைபெறுகிறது. ஜூன் 14, 15ஆம் நாள்களில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது,

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று சிங்கப்பூருக்குப் பயணமாகியுள்ளார். அவர் நாளை மறுநாளே ரணில் விக்ரமசிங்க நாடு திரும்புவார்.

இந்த நிலையில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும் நாளை நாட்டை விட்டுப் புறப்பட்டுச் செல்லவுள்ளார்.

சிறிலங்காவில் இன்னமும் முழு அளவிலான இயல்பு நிலை உருவாகாத நிலையில், உயர்அதிகாரம் மிக்க இரண்டு தலைவர்களும் ஒரே நேரத்தில் வெளிநாடு செல்வது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!