சஹ்ரானுக்கும் இராணுவத்துக்கும் தொடர்பு இருந்தது! – ஹிஸ்புல்லா சாட்சியம்

2015 காலப்பகுதியில் குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரியான சஹ்ரான் காசிமுக்கும், இராணுவத்துக்கும் தொடர்பு இருந்ததாக நாடாளுன்றத் தெரிவுக்குழு முன் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா சாட்சியம் வழங்கியுள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசேட நாடாளுமன்ற தெரிவு குழுவில் இன்று சாட்சியமளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அரபு நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையிலேயே கிழக்கில் பெயர்பலகைகளில் அரபு மொழி சேர்க்கப்பட்டது. அரபு மொழியை பயன்படுத்தக் கூடாது என சட்டம் இல்லை. காத்தான்குடியில் அரேபிய சுற்றலாப் பயணிகளை ஈர்க்கவே அரபு மொழிப் பெயர்களை பயன்படுத்தப்பட்டுள்ளது. எனக்கும் பயங்கரவாதி சஹ்ரானுக்கும் தொடர்பில்லை. ஆனால், 2015 காலப்பகுதியில் சஹ்ரானுக்கும் இராணுவத்துக்கும் தொடர்பு இருந்ததும, 2017 வரை சஹ்ரான் காசீம் மதத் தலைவராகக் கருதப்பட்டார். இதன் பின்னர் அவர் ஐ.எஸ். அல்லது சில குழுவுடன் தொடர்பு கொண்டதாகத் தெரிகிறது.

பொதுமக்களுக்கு தீவிரவாதத்தை பிரசங்கிக்க ஒலிபெருக்கியைப் பயன்படுத்துவதற்கும், ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கும் பொலிஸார் அனுமதி கொடுத்திருந்தார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!