பதவி விலகப் போவதாக தேர்தல் ஆணைக்குழு தலைவர் எச்சரிக்கை

மாகாணசபைத் தேர்தல்களை நடத்தாமல், அதிபர் தேர்தலை முதலில் நடத்துவதாயின் பதவியை விட்டு விலகப் போவதாக சிறிலங்கா தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய எச்சரித்துள்ளார்.

”முதலில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டியது தேர்தல்கள் ஆணைக்குழுவின் கடமை. அதுவே நடக்கும் என்று நாட்டுக்கு உறுதியளித்திருக்கிறேன்.

முதலில் அதிபர் தேர்தலை நடத்துவதென்றால், அதற்கு எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் நான் ஆணைக்குழுவின் தலைவர் பதவியை விட்டு விலகுவேன்.

எனினும், ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியில் இருந்து விட்டு விலகமாட்டேன் என மக்களுக்கு உறுதியளிக்கிறேன்.” என்றும் அவர் கூறியுள்ளார்.

மூன்று உறுப்பினர்களைக் கொண்ட தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவராக மகிந்த தேசப்பிரிய பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!