வெளிநாட்டு கரன்சிகள் இனி செல்லாது! – ஜிம்பாப்வே அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு!

ஆர்.டி.ஜி.எஸ். டாலர் எனப்படும் புதிய கரன்சியை கடந்த பிப்ரவரி மாதம் 22-ம் தேதி ஜிம்பாப்வே அரசு அறிமுகப்படுத்தியது. கடந்த வாரம் அமெரிக்க டாலருக்கு நிகரான ஆர்.டி.ஜி.எஸ். டாலரின் மதிப்பு 60 சதவீதம் சரிந்தது. இதற்கு அந்நாட்டின் பெரும்பாலான சரக்கு வர்த்தகம் வெளிநாட்டு கரன்சிகளான டாலர் மற்றும் ராண்டில் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

கடந்த 2009-ம் ஆண்டு அமெரிக்க டாலரை அதிகாரப்பூர்வ கரன்சியாக ஜிம்பாப்வே அரசு அறிவித்தது. இதையடுத்து ஜிம்பாப்வே டாலர் கரன்சியை மக்கள் படிப்படியாக தவிர்த்து விட்டனர்.

இதேநிலை தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஆர்.டி.ஜி.எஸ். டாலருக்கும் நிகழ்ந்துவிட கூடாது என்பதை கருத்தில் கொண்டு ஜிம்பாப்வே அரசு வெளிநாட்டு கரன்சிகளை தடை செய்துள்ளது.

சர்வதேச விமான சேவைகளுக்கு மட்டும் வெளிநாட்டு கரன்சிகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!