அஸ்கிரியபீட மாகாநாயக்க தேரரை கைது செய்யக் கோரியமை தவறு : தினேஷ் குணவர்தன

அஸ்கிரிய பீட மாநாயக்க தேரரை கைது செய்யுமாறு மாற்று கொள்கைகளுக்கான மத்திய நிலையம் பதில் பொலிஸ் மா அதிபரிடம் முறையிட்டுள்ளமை தவறான செயற்பாடாகும். குண்டு தாக்குதலை தொடர்ந்து ஏற்படவிருந்த இன வன்முறைகள் மத தலைவர்களின் வழிநடத்தலினாலே தவிர்க்கப் பட்டுள்ளது என்பதை நினைவுப்படுத்திக் கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று புதன் கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மத தலைவர்களின் கருத்துக்களுக்கு அரசியல் வேறுப்பாடுகளின்றி முன்னுரிமை வழங்கப் படுகின்றது. அரசியலமைப்பின் பிரகாரம் பௌத்த மதத்திற்கும். இணையாக ஏனைய மதங்களுக்கும் உரிய அந்தஸ்த்துக்கள் வழங்கப்பட்டுள்ளன.

அஸ்கிரிய பீட மாநாயக்க தேரர் வரகாகொட ஞானரத்ன தேரரை கைது செய்யுமாறு மாற்று கொள்கைகளுக்கான மத்திய நிலைய பொறுப்பதிகாரி பதில் பொலிஸ்மா அதிபரிடம் முறையிட்டுள்ளமை தவறான ஒரு தீர்மானமாகும். இதனை அவர் திருத்திக் கொள்ள வேண்டும்.

குண்டுதாக்குதல் தொடர்பில் அரசாங்கம் முன்னெடுக்கும் விசாரணைகள் பல காணப்படுகின்றது. ஆனால் இதுவரையில் யார் குற்றவாளி என்பது அறியப்படவில்லை. என்று பேராயர் மெல்கம் ஆண்டகை குறிப்பிட்டுள்ளமையில் உண்மை தன்மை காணப்படுகின்றது. இவரது கருத்தினை முழுமையாக வரவேற்கின்றோம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!