அணு­வா­யு­த மையத்தைத் தகர்க்கிறது வட­கொ­ரியா!!

வட­கொ­ரியா தனது அணுவாயுதச் சோதனை மையத்தை நிர்­மூ­ல­மாக்­கத் திட்­ட­மிட்­டுள்­ளது என்று பன்­னாட்டு ஊட­க­மான ரொயிட்­டர்ஸ் குறிப்­பிட்­டது.

தென்­கொ­ரி­யா­வில் அண்­மை­யில் நடை­பெற்ற குளிர்­கால ஒலிம்­பிக் தொட­ரில் வட­கொ­ரியா பங்­கேற்­றதை அடுத்து கொரிய நாடுகளுக்கு இடையிலான ஆறு தசாப்­த­கா­லப் போர் முடி­வுக்­குக் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது. வட­கொ­ரிய அதி­பர் கிம் ஜோங் உன்– – தென்­கொ­ரிய அதி­பர் மூன் ஜெ இன் இரு­வ­ரும் அண்­மை­யில் சந்­தித்­துக் கொண்­ட­னர்.

அணு­வா­யு­தங்­க­ளைக் கைவிட வட­கொ­ரியா சம்­ம­தம் தெரி­வித்­ததை அடுத்து கிம் ஜோன் உன் -– அமெ­ரிக்க அதி­பர் ட்ரம்ப் இடை­யி­லான சந்­திப்பும் விரை­வில் இடம்­பெ­ற­வுள்­ளது.

அணு­வா­யு­தம் தொடர்­பில் தாம் எதிர்­பார்க்­கும் முடிவு கிடைக்­கா­விட்­டால் கிம் ஜோங் உன்­னு­ட­னான சந்­திப்­பில் இருந்து இடை­ந­டு­வில் வெளி­யே­று­வேன் என்று ட்ரம்ப் ஏற்­க­னவே அறி­வித்­தி­ருந்­தார்.

ஆனால் அமெ­ரிக்­கா­வின் எதிர்­பார்ப்­பை ஒவ்­வொரு நாளும் நிறை­வேற்றி வரு­கி­றது வட­கொ­ரியா. அணு­வா­யு­தங்­க­ளைக் கைவி­டு­கி­றோம் என்று முன்­ன­தாக அறி­வித்­தது. அணு­வா­யு­தச் சோதனை மையங்­களை மூடு­வோம் என்று பின்­னர் அறி­வித்­தது. தற்­போது அணு­வா­யு­தச் சோதனை மையங்­கள் நிர்­மூ­ல­மாக்­கப்­ப­டும் என்று தற்போது தெரி­வித்­துள்­ளது வடகொரியா.

ட்ரம்ப் பாராட்டு
வட­கொ­ரி­யா­வின் இந்த அறி­விப்­புக்கு அமெ­ரிக்க அதி­பர் ட்ரம்ப் நன்றி தெரி­வித்­தார். வட­கொ­ரிய அதி­ப­ரு­ட­னான சந்­திப்­புக்கு முன்­னரே அணு­வா­யு­தச் சோதனை மையத்தை நிர்­மூ­ல­மாக்­கு­வ­தற்கு வட­கொ­ரியா முன்­வந்­துள்­ளமை சிறப்­பா­னது. பாராட்­டப்­பட வேண்­டி­யது என்று தனது கீச்­ச­கத்­தில் குறிப்­பிட்­டார் ட்ரம்ப்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!