புல்வாமா தாக்குதலுக்கு உளவுத்துறையின் தோல்வி காரணமல்ல – மத்திய அரசு விளக்கம்!

உளவுத்துறையின் தோல்வியால், புல்வாமா தாக்குதல் நிகழவில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்திருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி புல்வாமாவில், ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தினர் நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில், 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிர் தியாகம் செய்தனர். இந்த தாக்குதலுக்கு, உளவுத்துறையின் தோல்வியே காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக, மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷான் ரெட்டி பதிலளித்தார். அதில், புல்வாமா தாக்குதல், உளவுத்துறையின் தோல்வியால் நிகழ்த்தப்பட்டது என்பது, அடிப்படை ஆதாரமற்ற, தவறான குற்றச்சாட்டு என கிஷான் ரெட்டி தெரிவித்தார்.

மத்திய, மாநில உளவுத்துறையினர், பாதுகாப்புப்படைகளின் உளவுத்துறையினர் என அனைவரும் ஒன்றாக இணைந்து, தங்களுக்கு கிடைக்கும் தகவல்களை உடனக்குடன் பகிர்ந்துகொண்டு களப்பணியாற்றி வருவதாக, உள்துறை இணையமைச்சர் கூறியிருக்கிறார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!