எனக்கு அவரை பார்க்கனும்- அதிகாலையில் டிரம்பிற்கு வந்த விருப்பம்

வடகொரிய ஜனாதிபதி கிம்ஜொங் அன்னை இன்று அல்லது நாளை வடகொரியாவிற்கும் தென்கொரியாவிற்கும் இடையிலான எல்லையில் உள்ள இராணுவசூன்ய வலயத்தில் சந்திப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் டிரம்ப் விருப்பம் வெளியிட்டுள்ளார்.

ஜி20 மாநாட்டில் கலந்துகொண்டுவிட்டு இன்று தென்கொரியா செல்லவுள்ள டிரம்ப் தனது டுவிட்டர் செய்தியில் இதனை தெரிவித்துள்ளார்.

வடகொரிய ஜனாதிபதியை எல்லையில் சந்தித்து கைகுலுக்க விரும்புகின்றேன் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இவ்வாறானதொரு சந்திப்பு இடம்பெற்றால் அது இரு தரப்பு உறவுகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கு அர்த்தபூர்வமானதாக அமையும் என வடகொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு மிகவும் சுவாரஸ்யமானதாக காணப்படுகின்றது ஆனால் இன்னமும் உத்தியோகபூர்வ அறிவி;ப்பு எதுவும் எங்களிற்கு கிடைக்கவில்லை என வடகொரிய அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி விரும்புவது போன்று எல்லையில் வடகொரிய அமெரிக்க சந்திப்பு இடம்பெற்றால் இது தலைவர்களிற்கும் இடையிலான உறவினை மேலும் வலுப்படுத்துவதற்கும் இரு தரப்பு உறவுகளை முன்னேற்றுவதற்கும் உதவும் எனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!