நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் முதல் காலடியைப் பதித்த வீடியோ ஜூலை 20ஆம் தேதி ஏலம்!

நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் பதித்த அரிய வீடியோ பதிவானது ஏலத்திற்கு வந்துள்ளது. அப்போலோ 11 விண்கலத்தில் சென்ற குழுவானது 1969ஆம் ஆண்டு ஜுலை 20ஆம் தேதி நிலவில் கால் பதித்த வீடியோவை, 1976ஆம் ஆண்டில் நாசா ஏலத்தில் விட்டது. ஆயிரத்து 100 படச்சுருள்கள் கொண்ட அந்த வீடியோ பதிவானது, அப்போது வெறும் 218 டாலர்களுக்கு ஏலம் போனது. எந்திர பொறியியல் மாணவராக இருந்த ஃகேரி ஜார்ஜ் (Gary George) என்பவர் அந்தப் படச்சுருளை வாங்கினார்.

அந்த வீடியோ பதிவில் தான், நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் தனது முதல் காலடியை பதித்த காட்சியும், பொன் மொழி கூறுவதும் இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ பதிவை தற்போது ஏலத்திற்கு விட ஃகேரி ஜார்ஜ் முடிவு செய்துள்ளார். நியுயார்க்கில் உள்ள ஏல மையத்தில் ஜூலை 20ஆம் தேதி அன்று ஏலத்திற்கு வருகிறது. 13 கோடி ரூபாய் வரை ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!