குடியேற்றவாசிகளை தொடர்ந்து துரத்தும் மரணம்- லிபியா விமானதாக்குதலில் 40 பேர் பலி

லிபியாவில் குடியேற்றவாசிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த முகாம் மீது இடம்பெற்ற விமானதாக்குதலில் 40ற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

தலைநகர் திரிபோலியின் புறநகர் பகுதியில் உள்ள குடியேற்றவாசிகளை தடுத்து வைப்பதற்கான முகாமே விமானதாக்குதலிற்கு உள்ளாகியுள்ளது.

40ற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் 80ற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்னர் என தெரிவித்துள்ள அதிகாரிகள் ஆபிரிக்கநாடுகளை சேர்ந்த குடியேற்றவாசிகளே அதிகம் கொல்லப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பாவிற்கு செல்வதற்காக லிபியாவை குடியேற்றவாசிகள் அதிகளவு பயன்படுத்துவதும் இந்த குடியேற்றவாசிகள் லிபியாவில் உள்ள முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது

குடியேற்றவாசிகளின் முகாம்கள் இராணுவதளங்களிற்கு அருகில் அமைந்துள்ளன.

இவ்வாறு முகாமொன்றிற்கு அருகில் காணப்பட்ட குடியேற்றவாசிகளின் முகாமே தாக்குதலிற்கு உள்ளாகியுள்ளது.

நேரடி விமானதாக்குதலிற்கு இலக்கான பகுதியில் 120 குடியேற்றவாசிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

லிபியாவின் தேசிய இராணுவம் என்ற அமைப்பே இந்த தாக்குதலிற்கு காரணம் என லிபியாவில் உள்ள ஐநா ஆதரவுடனான அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

முன்கூட்டியே திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் இதுவென அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஹலிபா ஹவ்டரின் செயற்படும் லிபியா தேசிய இராணுவம் என்ற அமைப்பு அரசாங்கத்திற்கு எதிராக மோதலில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!