மும்மொழிகளிலும் தேர்ச்சி பெற்ற சமூகத்தை உருவாக்காதவரை இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது : மனோகணேசன்

மும்மொழிகளிலும் தேர்ச்சி பெற்ற சமூகத்தை உருவாக்கும் வரை இனப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண இயலாது. அதற்கமைய மூன்று மொழிமூல கல்வி நடவடிக்கைகளினூடாக இனவாதத்தை ஒழித்து நல்லிணக்கமும் , சமத்துவமும் உள்ள சமூகத்தை உருவாக்க முடியும் என்று தெரிவித்த தேசிய ஒருமைப்பாடு , அரச கருமமொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் மனோகணேசன் நாட்டை பிளவுபடுத்தும் சக்திகளின் செயற்பாடுகளை முறியடித்து நாட்டை ஒன்றுபடுத்த அயராது உழைக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.

அரசகரும மொழிகள் வார இறுதிநாள் நிகழ்வு இன்று கொழும்பு – இலங்கை மன்றக்கக்லூரியில் இடம்பெற்றது அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். .

இந்த நிகழ்வில் சபாநாயகர் கரு ஜெயசூரிய , அரச கரும மொழிகள் அமைச்சின் செயலாளர் ஏ.எஸ்.எம். எஸ். மகாநாம, ஐரோப்பிய ஒன்றயத்தின் அலுவல்கள் பொறுப்பாளர் ஃப்ரேன்க் ஹெஸ் உள்ளிட்ட அதிதிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!