தேசிய ஒற்றுமையுடனான தேசத்தை எதிர்கால சந்ததியினருக்கு கையளிப்பதே நோக்காக இருக்க வேண்டும் : கருஜெயசூரிய

இனவாத நோக்குடனான கருத்துக்களே நாட்டில் வன்முறையை தூண்டுகின்றன.வடக்கையும் தெற்கையும் பிளவுபடுத்தும் வகையிலான செயற்பாடுகள் முடிவுக்கு கொண்டுவரப்படவேண்டும்.

சிறந்த எதிர்காலத்திற்கு வடக்கிற்கும் தெற்கிற்கிற்கும் இடையிலான ஒற்றுமை கட்டியெழுப்பப்பட வேண்டும் என்றும் நாட்டின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சகல அரசியல் வாதிகளும் ஒன்றிணைய வேண்டும் என்றும் சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்தார்.

அரச கரும மொழிகள் வார இறுதிநாள் நிகழ்வு கொழும்பு – இலங்கை மன்றக்கல்லூரியில் இன்று இடம் பெற்றது. இதன்போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு கருத்துத்தெரிவித்த சபாநாயகர் கூறியதாவது .

தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரச கரும மொழிகள் அமைச்சினூடாக மேற்கொள்ளப்படும் செயற்திட்டங்கள் வரவேற்றத்தக்கவையாகும்.

நல்லிணக்கத்தையும் , சமத்துவத்தையும் ஏற்படுத்த மொழி இன்றியமையாததாகும்.; சமத்துவத்தை ஏற்படுத்துவதற்காக அமைச்சர் மனோகணேசனால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் வரவேற்கத்தக்கவையாகும் என அவர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!