தேயிலை, மிளகிற்கான கேள்வியை அதிகரிக்க வேண்டும் – அமைச்சர் சாகல

தேயிலை மற்றும் மிளகிற்கான கேள்வியை அதிகரித்து கிராமிய பொருளாதாரத்தை வலுப்படுத்துவது எமது பிரதான கடமையாகும் என‍ துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்தார்.

அத்துடன் தேயிலை மற்றும் மிளகு உற்பத்தில் காணப்படுகின்ற விலை தளம்பல் காரணமாக மக்கள் பெருமளவு பொருளாதார பிரச்சினைகளிற்கு முகங்கொடுத்துள்ளனர்.

நாட்டினுள் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி திட்டங்களிற்கு இணையாக தேயிலை மற்றும் மிளகு உற்பத்திகளின் பொருட்டு விசேட அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கும் பொருட்டும் ஒழுங்கான சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுப்பது அரசாங்கத்தின் கடமையாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தெனியாய பிரதேசத்தில் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை மக்களிற்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்து உரையாற்றும்போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

பிட்டபெத்தர பிரதேச செயலக அலுவலகத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய ஐந்து மாடி நிர்வாக கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு வைபவம் இதன்போது‍ அமைச்சர் சாகல ரத்னாயக்க தலைமையில் நடைப்பெற்றது.

1400 மில்லியன் ரூபாவுக்கும் அதிக செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள இப் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டதன் பின்னர் அமைச்சர் பிட்டபெத்தர பிரதேச செயலக ஆளுகைக்குட்பட்ட குறைந்த வருமானம் ஈட்டும் மக்களிற்கான காணி உறுதி பத்திரங்களையும் வழங்கி வைத்தார்.

அத்துடன் தெனியாய கொட்டபொல கொடகும்புரவில் 39 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய பாலத்தை அமைச்சர் மக்கள் பாவனைக்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க கையளித்தமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!