செப்ரெம்பரில் அமெரிக்க – சிறிலங்கா கூட்டுப் பயிற்சி: திருகோணமலையில் ஆலோசனை

அமெரிக்க கடற்படையின் மரைன் படையணியைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவொன்று, திருகோணமலையில் உள்ள சிறிலங்காவின் கிழக்கு பிராந்திய கடற்படைத் தலைமையகத்துக்குச் சென்று பேச்சுக்களை நடத்தியுள்ளது.

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக பாதுகாப்பு ஆலோசகர் இஸ்ரேல் றோசாவை உள்ளடக்கிய மூன்று பேர் கொண்ட இந்தக் குழு, கடந்த புதன்கிழமை கிழக்கு பிராந்திய பிரதி கடற்படைத் தளபதி கொமடோர் ஜெயந்த குலரத்னவைச் சந்தித்துப் பேசியது.

இந்தச் சந்திப்பில், சிறிலங்கா கடற்படையின் மரைன் படைப்பிரிவின் 1 ஆவது பற்றாலியன் தளபதி கொமாண்டர் கயங்க காரியவசம், மரைன் படைப்பிரிவின் மூத்த முகாமை அதிகாரி கொமாண்டர் இந்திய விஜேரத்ன ஆகியோரும் பங்கேற்றனர்.

வரும் செப்ரெம்பர் மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ள சிறிலங்கா மற்றும் அமெரிக்க மரைன் கொமாண்டோக்கள் பங்கேற்கும் கூட்டுப் பயிற்சி தொடர்பான விவகாரங்கள் குறித்து இவர்கள் கலந்துரையாடினர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!