அடுத்தடுத்து நிகழும் விபத்துகள் – விசாரிக்க இராணுவ நீதிமன்றம்

கடந்த சில வாரங்களில் இடம்பெற்ற விபத்துகளில் அதிகளவு சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டமை மற்றும், காயமடைந்தமை தொடர்பாக இராணுவ நீதிமன்ற விசாரணை நடத்தப்படவுள்ளது.

முல்லைத்தீவு, கிளிநொச்சி, அம்பாறை, வவுனியா, சூரியவெவ ஆகிய இடங்களில் ஜூன் 25ஆம் நாளுக்குப் பின்னர் இடம்பெற்ற விபத்துகளில், குறைந்தது 8 சிறிலங்கா இராணுவத்தினர் உயிரிழந்தனர். 30 படையினர் காயமடைந்தனர். இவர்களில் பலர் மோசமான காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

கிளிநொச்சியில் தொடருந்து மோதிய விபத்தில், 6 படையினரும், முல்லைத்தீவு மற்றும் வவுனியாவில் தலா 1 படையினரும் விபத்துகளில் உயிரிழந்தனர்.

மேலும், ஒரு மேஜர் தர அதிகாரி உள்ளிட்ட 30இற்கும் அதிகமான படையினர் இந்தச் சம்பவங்களில் காயமடைந்தனர்.

இந்தச் சம்பவங்கள் தொடர்பாக இராணுவ நீதிமன்ற விசாரணை நடத்தப்படவுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!