மாகாணசபை தேர்தல் அரசியல் அதிகார பிரச்சினைக்கு தீர்வாகாது -ஜீ.எல்.பீரிஸ்

மாகாண சபை தேர்தலை நடத்துவதால் நடைமுறையில் உள்ள அரசியல் அதிகார பிரச்சினைகளுக்கு ஒருபோதும் தீர்வு காண முடியாது எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ், மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு தடையாக உள்ள காரணிகளுக்கு தீர்வை பெறாமல் தேர்தலை நடத்துவது பொருத்தமற்றதாகும் என்றும் குறிப்பிட்டார்.

அத்துடன் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான வர்த்தமாணி அறிவித்தல் வெளியிடப்படும் என்று தற்போது குறிப்பிடப்படுகின்றது. அரசியல் தேவைகளை நிறை வேற்றிக் கொள்வதற்கும், ஜனாதிபதி தேர்தலின் தேர்தல் மீதான கவனத்தை திசை திருப்பவுமே தற்போது. இவ்வாறான பயனற்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் அவர் கூறினார்.

பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!