இராணுவத்தை மறந்து விட்டனர்! – கோத்தா வேதனை

30 வருட யுத்தத்தை முற்றாக ஒழித்த இராணுவத்தினரின் அர்பணிப்பை பலரும் மறந்து போயுள்ளதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். “உலக நாடுகள் எவையுமே முற்றாக யுத்தத்தை ஒழிக்காத போது தனிப்பட்ட நலன்களை மாத்திரம் கருத்திற்கொள்ளாமல் மக்களுக்கு முற்றாக யுத்தத்தை ஒழித்த இராணும் இலங்கையில் மாத்திரமே உள்ளது.

மக்களின் பாதுகாப்பு மற்றும் நிலைப்பை கருத்திற் கொண்டே இராணுவம் இந்த செயற்பாடுகளை முன்னெடுத்தது. இதனை பலரும் மறந்து போயுள்ளனர். இந்த நாட்டின் அப்பாவி மக்கள் பலரை பயங்கரவாதிகள் கொன்று குவித்தனர். அத்துடன் எல்லை கிராமங்களில் இருந்த மக்களின் உயிர் பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்பட்ட முப்படையின் செயற்பாடுகள் மறக்க முடியாதவை. மேலும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இராணுவ வீரர்களுக்கு தாம் பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலத்தில் ஏற்படுத்திக்கொடுத்த நலன் திட்டங்களும் அவர்களை சென்றடைவதில்லை” என தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!