வீதி விபத்துக்களை தடுக்க சீரான சட்ட உருவாக்கம் அவசியம் ; கரு ஜயசூரிய

அரச போக்குவரத்துச் சேவையை மேலும் தரமானதாக மாற்றுவதற்கான முதலீடுகள் அதிகரிப்பட வேண்டும். அத்தோடு வீதிவிபத்துக்களைத் தடுப்பதற்கான சீரான சட்ட உருவாக்கமும் இன்றியமையாததாகும் என்று சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

நாட்டில் கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து இம்மாதம் 2 ஆம் திகதி வரை இடம்பெற்ற வீதிவிபத்துக்களில் 1629 பேர் மரணித்திருக்கிறார்கள்.

அதேவேளை நேற்று திங்கட்கிழமை அரச பஸ் மற்றும் தனியார் பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் ஆறுபேர் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்ற நிலையிலேயே சபாநாயகர் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டிருக்கிறார். அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

அண்மைக்காலமாக தவிர்க்க முடியாத வீதிவிபத்துக்களால் அப்பாவி உயிர்களுக்கும், பெறுமதி வாய்ந்த சொத்துக்களுக்கும் இழப்பு ஏற்படுவதுடன், நேரவிரயத்தையும் எதிர்கொள்ள நேரிடுகிறது.

இந்நிலையில் அரச போக்குவரத்துச் சேவையை மேலும் தரமானதாக மாற்றுவதற்கு முதலீடுகள் அதிகரிப்பட வேண்டும். அத்தோடு விபத்துக்களைத் தடுப்பதற்கு அவசியமான சீரான சட்ட உருவாக்கமும், பொறுப்பு வாய்ந்த முறையில் வாகனங்களைச் செலுத்துவதை ஊக்குவிப்பதற்குமான முயற்சிகள் அவசியமானவையாகும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!