காஷ்மீர் விவகாரம்: தற்போதைய மாற்றத்தால் ஏற்படப்போகும் விளைவுகள்!

ஜம்மு காஷ்மீருக்கு வழக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து பறிக்கப்பட்டதன் மூலம் இனி அங்கு இந்தியர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் சொத்து, நிலம் வாங்கலாம்! இதன் மூலம் இந்தியாவிலேயே இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்ற பெயர் பெற்ற காஷ்மீர் பகுதியில் இந்து, முஸ்லிம் விகிதாச்சாரம் மாறுபட வாய்ப்புள்ளது. இனி அதிக தொழிற்சாலைகள் அங்கு முளைக்கலாம். இதனால் இந்திய கார்பரேட் முதலாளிகள் அங்கு மிகப்பெரிய அளவில் சொத்துகளை வாங்கி குவிக்கலாம். அதே சமயம் காஷ்மீரில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். ஆனால், இதன் மூலம் நிறைய சுற்றுச்சூழல் பிரச்சினைகளையும் அந்த இயற்கை பிரதேசம் சந்தித்திக்க வேண்டியதிருக்கும்!

* அரசியல் சட்ட பிரிவு 370-ஐ ஆதரிப்பவர்கள் வைக்கும் வாதம் என்னவென்றால், இந்த சிறப்பு சட்ட பிரிவினால் தான் காஷ்மீரின் இயற்கைவளம், பன்முக உயிர் சூழல் போன்றவை பேணி காக்கப்பட்டது!

* இது மட்டுமின்றி சர்ச்சைக்குரிய பகுதியில் வாழும் மக்களுக்கு நாங்கள் அரசியல் சட்டப்படி மேலான உரிமைகளை தந்து கொண்டிருக்கிறோம் என உலகத்தின் முன்பு நெஞ்சம் நிமிர்த்தி சொல்ல முடிந்தது. மேலும் மண்ணின் மைந்தர்களுக்கான வேலை என்பது இது நாள் வரை பாதுகாக்கப்பட்டது. அதை வெளியில் இருந்து வந்து யாரும் பறித்துவிடுவார்கள் என்ற அச்சத்திற்கு அவசியமற்று மக்கள் சுற்றுலா பயணிகள் மூலம் கிடைக்கும் சொற்ப வருமானத்தை கொண்டு வாழ்ந்தார்கள். இனி இதற்கு உத்தரவாதம் இல்லை.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!