பகு­தி ­நேர வேலை­யாக சட்டம் ஒழுங்கு அமைச்­சை பார்க்கக் கூடாது – ரஞ்சித் மத்­து­ம ­பண்­டார

சட்டம் ஒழுங்கு அமைச்சு நிலை­யான அமைச்­சாக இருக்க வேண்டும். அதன் செய­லா­ளரும் நிலை­யான ஒரு­வ­ராக இருக்க வேண்டும். பகு­தி­ நேர வேலை­யாக சட்டம் ஒழுங்கு அமைச்­சை பார்க்­கக் ­கூ­டாது. அதே­போன்று சஹ்ரான் அமைப்­பினர் முதலில் மத அடிப்­ப­டை­வா­திகள் என்ற நிலையில் தான் கூறப்­பட்­டனர். நோக்கம் வேறாக இருந்­தாலும் அவர்கள் பயங்­க­ர­வா­திகள் என காட்­டிக் ­கொள்­ள­வில்லை. அதனால் அதிக முக்­கி­யத்­துவம் வழங்­காமல் செயற்­பட்­டி­ருக்­கலாம் என அமைச்சர் ரஞ்சித் மத்­து­ம ­பண்­டார சாட்­சி­ய­ம­ளித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் குறித்து விசா­ரணை நடத்தி பாரா­ளு­மன்­றத்­துக்கு அறிக்கை சமர்ப்­பிக்க நிய­மிக்­கப்­பட்ட விசேட தெரி­வுக்­குழு முன்­னி­லையில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை சாட்­சி­ய­ம­ளிக்க வந்­தி­ருந்த போதே அமைச்சர் ரஞ்சித் மத்­து­ம ­பண்­டார இவற்றைக் கூறினார். அவரின் சாட்­சியம் வரு­மாறு:

கேள்வி :- சட்டம் ஒழுங்கு அமைச்­ச­ராக நீங்கள் சிறிது காலம் கட­மை­யாற்­றி­னீர்கள். இந்தக் காலத்தில் உங்­க­ளி­டமும் சில தக­வல் கள் வழங்­கப்­பட்­ட­தாக கூறப்­ப­டு­கின்­றது. புல­னாய்வுத் துறையும் சில தக­வல்­களை வழங்­கி­ய­தாகக் கூறினர். அது குறித்து தெரி­விக்க முடி­யுமா?

பதில் :- சட்டம் ஒழுங்கு அமைச்­ச­ராக 2018 மார்ச் 8 தொடக்கம் ஒக்­டோபர் 25ஆம் திகதி வரையில் பத­வியில் இருந்தேன். இதன்­போது நாட்டின் நிலை­மைகள், பயங்­க­ர­வாத செயற்­பா­டுகள் கிழக்கில் முஸ்லிம் பள்­ளி­வாசல் பிரச்­சினை குறித்தும் பேசினோம். அரச புல­னாய்வு அதி­காரி மூல­மா­கவும் பொலிஸ் மூலமும் நாளாந்த அறிக்கை கிடைக்கும். அவற்றை ஆராய்­வது எனது கட­மை­யாகும். 2015ஆம் ஆண்டு ஐ.எஸ் அமைப்பு குறித்து இரண்டு அறிக்­கைகள் கிடைத்­தன. தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலை­மைகள் மற்றும் சமூக ஊட­கங்­களில் அவர்கள் கொண்­டு­செல்லும் பிர­சா­ரங்கள் குறித்தும் அவர்­களின் மத போத­னைகள் குறித்தும் அறி­விக்­கப்­பட்­டது.

அதற்கு முன்­னரும் எனது அதி­கா­ரிகள் மூல­மாக ஐ.எஸ். அமைப்பில் தொடர்­பு­கொண்ட நிலாம் என்ற நபர் குறித்து அறி­யத்­தந்­தனர். அவர் சிரியா சென்று போராடி இறந்தார் என்­பது குறித்தும் கூறினர். சஹ்ரான் என்ற நபர் பள்­ளி­வாசல் இரண்டின் மோதல் விட­யத்தில் பிடி­யாணை விடுக்­கப்­பட்டும் அவர் பிடி­ப­ட­வில்லை. அதற்குப் பின்­னரும் இன்­னொரு பிடி­யாணை விடுக்­கப்­பட்­டி­ருந்­தது. அவ­ரது பிர­தே­சங்­களில் தேடியும் நபர் கிடைக்­க­வில்லை. இந்தக் கார­ணிகள் குறித்து அறிந்­தி­ருந்தேன். அதன் பின்னர் எனது அமைச்சு மாற்­றப்­பட்­டது.

கேள்வி:- ஏழு மாத­ கா­ல­மாக நீங்கள் அமைச்­ச­ராக இருந்­தீர்கள்…

பதில்:- ஆம்

கேள்வி:- அரச புல­னாய்வு மூலம் எவ்­வா­றான தகவல் கிடைத்­தது?

பதில்:- இந்த அமைப்பு சர்­வ­தேச மட்­டத்தில் செயற்­பட்ட ஒன்­றா­கவும், சஹ்ரான் என்ற நபர் செய்த செயற்­பா­டுகள் குறித்தும் முறை­யி­டப்­பட்­டது. இனக் கல­வ­ரத்தை எவ்­வாறு அவர் மதச் செயற்­பா­டுகள் மூல­மாகச் செய்­கின்றார் என்றும் கூறப்­பட்­டது.

கேள்வி:- அரச புல­னாய்வு உங்­களின் கீழ் இல்­லையே…

பதில்:- ஆம்

கேள்வி:- பாது­காப்பு அமைச்சின் கீழ் தானே உள்­ளது?

பதில்:- ஆம்

கேள்வி:- அல்­கைதா அமைப்பு குறித்த விசா­ரணை ஒன்­றை நிறுத்த உங்­க­ளுக்கு ஏதும் கடிதம் வந்­ததா?

பதில்:- இல்லை எனக்கு அவ்­வாறு ஒன்றும் வர­வில்லை.

கேள்வி:- பாது­காப்பு அமைச்சின் கூட்­டங்­க­ளுக்குச் சென்­றுள்­ளீர்­களா?

பதில் :- ஆம். சென்­றுள்ளேன்.

கேள்வி:- சட்டம் ஒழுங்கு அமைச்சு மிகவும் முக்­கி­ய­மான ஒன்­றாகும். இதில் நிரந்­தர அமைச்சர், செய­லாளர் இருக்க வேண்டும். பகு­தி­ நேர வேலை­யாக இதனை பார்க்க முடி­யாது. நான் அமைச்­ச­ராக இருந்து சரி­யாக செயற்­பட்­டுள்ளேன். காத்­தான்­குடி குறித்து தொடர்ச்­சி­யாக ஆராய்ந்­துள்ளேன். சஹ்ரான் முதலில் மத ரீதியில் பய­ணித்து பின்­னரே பயங்­க­ர­வா­தத்தின் பக்கம் வந்­துள்ளார். முதலில் அல்லாஹ் வின் பெயரால் என பல கார­ணி­களை முன்­வைத்­துள்ளார். பின்­னரே பயங்­க­ர­வாதச் செயற்­பா­டு­களில் சென்­றுள்ளார்.

கேள்வி:- நீங்கள் அமைச்­ச­ராக இருந்த காலத்தில் இறுதி நேரத்தில் பல சம்­ப­வங்கள் இடம்­பெற்­றன. உங்­க­ளுக்கு ஏதும் கார­ணிகள் அறி­விக்­கப்­பட்­ட­னவா?

பதில்:- ஆம் அதனால் தானே அவரை கைது செய்ய நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டது. ஆனால் இன்­னமும் ஆழ­மாக ஆராய்ந்­தி­ருக்க வேண்டும் என்று நினைக்­கின்றேன். இந்த விசா­ரணை செய்த பொலிஸ் அதி­கா­ரியும் வேறு கார­ணங்­க­ளுக்­காக கைது ­செய்­யப்­பட்டார்.

கேள்வி:- நிசாந்த சில்­வாவின் இட­மாற்றம் குறித்து பாது­காப்பு கூட்­டத்தில் பேசப்­பட்­டது தானே?

பதில்:- அவ­ரது இட­மாற்றம் பின்னர் நிறுத்­தப்­பட்­டது. இது குறித்துப் பேசி ஒரு சில நாட்­களில் அர­சாங்கம் மாறி­விட்­டது.

கேள்வி:- ஐ.சி.சி.பி.ஆர்.இன் கீழ் கைதுகள் இடம்­பெற்­ற­னவா?

பதில்:- ஆம். திகன சம்­ப­வத்தில் சிலர் கைது­ செய்­யப்­பட்­டனர்.

கேள்வி :- ஐ.சி.சி.பி.ஆர்.இன் கீழ் பொலிஸார் கைது­ செய்­யப்­பட்­டது இது முதல் தட­வையா?

பதில் :- இதற்கு முன்னர் இருந்­ததா என்று எனக்குத் தெரி­யாது.

கேள்வி:- சட்டம் ஒழுங்கு அமைச்­ச­ருக்கு அந்தத் துறை குறித்து கூடிய அறிவு இருந்தால் நல்­லது என நினைக்­கி­றீர்­களா?

பதில்:- அப்­படி அல்ல, அனை­வரும் அனைத்­தையும் அறிந்­து­கொண்டு இருக்க முடி­யாதே. உரிய அதி­கா­ரி­களைக் கொண்டு செயற்­பட வேண்டும். அது போது­மா­னது. ஜனா­தி­ப­தி­யாகத் தெரி­வு­செய்­யப்­ப­டு­பவர் அனைத்­தையும் தெரிந்­து­கொண்டா தெரி­வா­கின்றார்? அது போன்­று தான் அனைத்­துமே உள்­ளன.

கேள்வி:- சஹ்ரான் குறித்து உங்­களின் அமைச்சுக் காலத்­திலும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இதில் குண்­டு­தா­ரி­களில் ஒருவர் இதற்கு முன்னர் கைது ­செய்­யப்­பட்டு விடு­விக்­கப்­பட்­டுள்ளார். இது குறித்து என்ன நினைக்­கி­றீர்கள்?

பதில்:- முதலில் இவர்கள் மத அடிப்­ப­டை­வா­திகள் என்ற நிலையில் தான் கூறப்­பட்­டனர். நோக்கம் வேறாக இருந்­தாலும் அவர்கள் பயங்­க­ர­வா­திகள் எனக் காட்­டிக்­கொள்­ள­வில்லை.

கேள்வி:-முஸ்லிம் பயங்­க­ர­வா­தமும் முஸ்லிம் அடிப்­ப­டை­வா­தமும் ஒன்­றா­கவே பய­ணிக்கும். இதனை அறிந்­து­கொள்­ள­வில் ­லையா?

பதில்:- பாது­காப்பு புல­னாய்வு அதி­கா­ரி கள் கூட ஆரம்­பத்தில் எமக்கு ஒன்றும் கூற­வில்லை. போதைப்­பொருள் கடத்தல் விட­யங்கள் குறித்து அதி­க­மாகப் பேசினோம். ஆனால் அப்­போதும் கூட இதனைக் கூற­வில்லை. ஆனால் இதன் பார­தூரம் விளங்­கிய கார­ணத்­தால் தான் சர்­வ­தேச பொலிஸ் உத­வியும் கேட்­கப்­பட்­டது.

கேள்வி:- என்ன செய்தும் அவரைத் தடுக்க முடி­ய­வில்­லையே…?

பதில்:- ஆம். சர்­வ­தேச புல­னாய்வுத் தகவல் கிடைத்தும் நாம் அதனை சரி­யாக பயன்­ப­டுத்­தி­யி­ருக்க வேண்டும்.

கேள்வி:- நீங்கள் கைது­களை வலி­யு­றுத்­த­வில்­லையா?

பதில்:- ஆம், நான் சிறிது காலம் பத­வியில் இருந்தேன். அது­வரை நான் நட­வ­டிக்கை எடுத்தேன். நீங்கள் கேட்கும் எல்லா கேள்­விகளுக்கும் நான் பதில் கூற­ வேண்­டிய அவ­சியம் இல்லை.

கேள்வி:- உங்­க­ளுக்குக் கிடைத்த அறிக்­கையில் இரண்டு அறிக்­கைகள் ஐ.எஸ் மற்றும் தௌஹீத் ஜமாஅத் குறித்து கிடைத்­த­தாகக் கூறி­னீர்கள். எந்தக் காலத்தில்?

பதில் :- மே மாதமே இரண்டும் கிடைத்தன. மே 17ஆம் திகதி மற்றும் 19ஆம் திகதி.

கேள்வி:- அப்படியென்றால் திகன சம்ப வத்தின் பின்னர் அதில் சமூக ஊடகங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதா?

பதில்:- ஆம்

கேள்வி:- என்ன இருந்தது அதில்? நீங்கள் பார்த்தீர்களா?

பதில்:- பார்த்தேன்

கேள்வி:- தமிழில் தானே அவர் கூறி யுள்ளார்.

பதில்:- ஆம், மொழிபெயர்ப்பு பார்த்தேன்.

கேள்வி:- கைதுகள் ஏன் தாமதம் என நீங்கள் தேடிப் பார்த்தீர்களா ?

பதில்:- ஆம், பொலிசார் தொடர்ந்தும் தேடுதல் நடத்தியுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!