வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

வடக்கு, வட மத்திய, வடமேல் மாகாணங்கள் மற்றும் திருகோணமலை, மாத்தளை மாவட்டங்களுக்கு சிறிலங்கா வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேற்படி பகுதிகளில் எதிர்பாராத விதமாக பலத்த காற்று வீசும் என்றும், இங்கு காற்றின் வேகம், 70 – 80 கி.மீ வரை செல்லக் கூடும் என்றும், எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஏனைய இடங்களில் காற்றின் வேகம் மணிக்கு 55 – 65 கிமீ வேகத்தை எட்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற்பகல் வேளைகளிலேயே இந்த நிலை இருக்கும் என்றும் தெரிவித்துள்ள வளிமண்டலவியல் திணைக்களம், மன்னார், காங்கேசன்துறை மற்றும் திருகோணமலை வழியாக- நீர்கொழும்பில் இருந்து மட்டக்களப்பு வரையான, கடல் பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும் என்றும் எச்சரித்துள்ளது.

காற்றின் வேகம் சில வேளைகளில் 60 – 70 கிமீ வரை அதிகரிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!