அரசியல் மற்றும் சமூக பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி தேர்தல் ஊடாகவே நிரந்தர தீர்வு ; டலஸ்

மாகாண சபை தேர்தலை நடத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது முயற்சிப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் அது பயனற்றது. நடைமுறையில் எழுந்துள்ள அரசியல் மற்றும் சமூக பிரச்சிகைகளுக்கு பலமான தலைமைத்துவத்தின் ஊடாகவே தீர்வு கிடைக்கும். ஆகையால் ஜனாதிபதி தேர்தலே முதலில் இடம் பெறும் என பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

முறைப்படி நோக்குவோமாயின் தற்போது நாட்டில் மாகாண சபை தேர்தலே முதலில் இடம் பெற்றிருக்க வேண்டும். அரசியல் சுய தேவைகளுக்காகவே மாகாண சபை தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு வடக்கு மக்களின் தேர்தல் உரிமைகள் தம்மால் பறிபோயுள்ளது என்று அறிந்தும் தேர்தல் உரிமைகளை மீள பெற்றுக் கொடுப்பதற்கு எவ்விதமான முன்னேற்றகர நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.

மாகாண சபை தேர்தலை நடத்துவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சட்டவியாக்கியானம் கோரியுள்ளமை வரவேற்கத்தக்கது என அவர் இதன்போது தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!