பௌத்தமும் சைவமும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் ; சபாநாயகர்

பௌத்தமும் சைவமும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் அதே நேரத்தில் ஏனைய மதங்களையும் அரவனைத்து செயற்பட வேண்டும் இதனை அனைவரும் உணர்ந்து செயற்பட வேண்டும் அதற்காக நான் என்னை எந்த நேரத்திலும் அர்ப்பணித்து செயற்படுவதற்கு தயாராக இருப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்ததாக அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

மத நல்லினக்கம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று அண்மையில் சபாநாயகர் கரு ஜயசூரியவின் காரியாலத்தில் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலுக்கான ஏற்பாடுகளை மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் உலக சைவ திருச்சபையின் இலங்கைக்கான தலைவரும் விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் மேற்கொண்டிருந்தார்.

இந்த கலந்துரையாடலில் சபாநாயகர் கரு ஜயசூரிய மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் உலக சைவ திருச்சபையின் இலங்கைக்கான தலைவரும் விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் கணடா பெரிய சிவன் ஆலயத்தின் ஸ்தாபகரும் உலக சைவ திருச்சபையின் தலைவருமான வள்ளிபுரம் அடியார் விபுலானந்தன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் இன்று நாட்டில் மத நல்லிணக்கம் என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாக மாறியுள்ளது.இதனை கருத்தில் கொண்டு நாங்கள் ஒரு கலந்துரையாடலை சபாநாயகருடன் ஏற்பாடு செய்திருந்தோம்.

அதற்கு காரணம் சபாநாயகர் அனைத்த சமூகத்தையும் இணைத்து செயற்பட வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக செயற்பட்டு வருகின்றார்.

இதன் காரணமாகவே நாங்கள் அவரை சந்தித்தோம்.இதற்கு முக்கிய காரணம் உலக சைவ திருச்சபையின் தலைவரும் பௌத்தமும் சைவமும் இணைந்து செயற்பட வேண்டும் என்பதில் மிகவும் அக்கரையாக செயற்பட்டு வருகின்றார்.எனவே சபாநாயகருடன் இந்த

சந்திப்பை மேற்கொள்வது சிறப்பாக இருக்கும் என்ற எண்ணத்தில் இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டது.

சுபாநாயகர் எங்களிடம் கருத்து தெரிவிக்கையில் பௌத்தமும் வைசமும் இணைந்து பயணிப்பதில் எந்தவிதமான தடங்களும் இல்லை.பல விடயங்கள் இரண்டு சமயங்களுக்கும் ஒத்துப் போகின்ற ஒரு தன்மை இருக்கின்றது.குறிப்பாக பௌத்த மக்கள் கோவில்களுக்கு சென்று வழிபடுவதும் சைவ மக்கள் விகாரைகளுக்கு சென்று வழிபடுவதும் பல காலங்களாக நிகழ்ந்து வருகின்றது.

எனவே இந்த இரண்டும் ஒன்றாக பயணிக்க முடியும்.அதே நேரத்தில் ஏனைய சமயங்களையும் அரவணைத்துக் கொண்டு சென்றாலே நாம் இந்த நாட்டில் சாந்தியும் சமாதானமாகவும் வாழ முடியும்.எனவே மதங்களுக்கு இடையில் நல்லினக்கம் என்பது மிகவும் முக்கியமானது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!