அணுகுண்டுகளை வீசி சூறாவளிகளை தகர்ப்பது தொடர்பில் வெளியான செய்தி பொய்யானது

அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் சூறா­வ­ளி­களை அணு­குண்­டு­களை வீசித் தடுக்க அமெ­ரிக்க பாது­காப்பு அதி­கா­ரி­க­ளுக்கு ஆலோ­சனை வழங்­கி­ய­தாக செய்தி வெளியாகி பல­ரையும் திகைப்பில் ஆழ்த்­தி­யுள்ள நிலையில் அதனை பொய் செய்தி என டொனால்ட் ட்ரம்ப் மறுத்­துள்ளார்.

பிரான்ஸில் இடம்­பெற்ற ஜி–7 உச்­சி­மா­நாட்டில் கலந்­து­கொண்டு விட்டு நேற்று முன்­தினம் திங்­கட்­கி­ழமை இரவு வெள்ளை மாளி­கைக்கு திரும்­பிய நிலையில் டுவிட்டர் இணை­யத்­த­ளத்தில் தன்னால் வெளியி­டப்­பட்ட செய்­தி­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.

“பிரான்ஸில் மிகவும் வெற்­றிகர­ மாக அமைந்த ஜி–7 உச்­சி­மா­நாட்டில் கலந்­து­கொண்டு விட்டு சிறிது முன்­னரே நாடு திரும்­பிய நிலையில் சூறா­வ­ளிகள் எமது கட ற்­க­ரையை வந்­த­டையும் முன்னர் அவற்றை அணு ஆயு­தங்­களைப் பயன்­ப­டுத்தி தகர்க்க நான் விரும்­பு­வ­தாக போலி­யாக புனை­யப்­பட்ட பொய்­யான செய்­தியை மட்­டுமே நான் காண நேர்ந்­தது” என ட்ரம்ப் தனது டுவிட்டர் செய்­தியில் குறிப்­பிட்­டுள்ளார்.

“இது மிகவும் கேலிக்­கு­ரிய ஒரு­ போதும் நடை­பெ­ற­மு­டி­யாத ஒன்­றாகும்” என அவர் கூறினார். அக்­ஸியஸ் இணை­யத்­த­ளத்தில் அமெ­ரிக்க உள்நாட்டு பாது­காப்பு மற்றும் பாது­காப்பு வட்­டா­ரங்­களை மேற்கோள்­காட்டி வெளியிடப்பட்ட இந்த செய்தியை அமெரிக்க ஊடகங்கள் மட்டுமல் லாது சர்வதேச ஊடகங்கள் பலவும் மீள வெளியிட்டிருந்தன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!