“அமெரிக்கா – சீனாவுக்கிடையிலான வர்த்தக போர் எமது பொருளாதாரத்தில் மாபெரும் தாக்கத்தை செலுத்தியுள்ளது”

அமெரிக்கா – சீனா இடையிலான வர்தக போர், ரஷ்யா மீதான தடைகள் இலங்கையின் பொருளாதார துறையில் மாபெரும் தாக்கத்தை செலுத்தியுள்ளதாக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

இலங்கையை வசதிகள் சேவைகள் கையாளுகையில் சிறந்த நாடாக மாற்றியமைப்பதற்கான முயற்சிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கொள்கலன் கையாளுகையில் கொழும்பு துறைமுகம் முன்னேற்றம் அடைந்தள்ளது. இந்நிலையில் தற்போது கொழும்பு கிழக்கு துறைமுகத்தின் அபிவிருத்தி குறித்து இந்தியாவுடனும் ஜப்பானுடனும் கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஜெர்மனிக்கும் இலங்கைக்கும் இடையிலான வசதிகள் சேவைகள் வழங்கலுக்கான முதலாவது மாநாடு இன்று வியாழக்கிழமை கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் இடம்பெற்றது.

அதில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இந்த மாநாட்டில் அமைச்சர் சாகல ரத்நாயக்க, இலங்கைக்கான ஜெர்மனிய தொழில் மற்றும் வர்த்தக பிரதிநிதி ஆண்ட்ரியாஸ் ஹெர்ஜன்டோதர், இலங்கைக்கான ஜெர்மனியின் பிரதி தூதுவர் ஆண்ரியாஸ் பேர்க், ஜெர்மன் மத்திய போக்குவரத்து மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு பிரதி அமைச்சர் ஸ்டெஃபென் பில்கர், உள்ளிட்டோரும் கலந்துக்கொண்டனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!