பதிலே தேவை; அனுதாபம் அல்ல!

காணாமல்போனோர் அலுவலகம் ஸ்தாபிக்கப்படும் வரை காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினர் வழங்கிய முறைப்பாடுகள் எவற்றையும் உரிய அரச நிறுவனங்கள் கருத்தில் கொள்ளவில்லை என்று காணாமல்போனோர் அலுவலகத்தின் ஆணையாளர்களில் ஒருவரான ஜெயதீபா புண்ணியமூர்த்தி தெரிவித்தார்.

சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு கடந்த காலங்களில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களை நினைவு கூரும் நிகழ்வு நேற்று காணாமல்போனோர் அலுவலகத்தினால் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் கருத்து வெளியிட்ட காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் ஆணையாளர்களில் ஒருவரான ஜெயதீபா புண்ணியமூர்த்தி கூறியதாவது:

‘என்னுடைய கணவர் காணாமலாக்கப்பட்ட போது, நான் பொலிஸில் முறைப்பாடு செய்வதற்காகச் சென்றேன். அப்போது அவர்கள் எனது கணவருக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதி இருக்கிறதா என்று கேட்டார்கள். உண்மையில் அரச நிறுவனங்கள் எம்முடைய தேவை எதுவென்பதைப் புரிந்துகொள்ளவில்லை. கேள்விகளுக்கான பதிலே எமது தேவையாக இருக்கின்றது, மாறாக அனுதாபமல்ல.

பலவருட காலமாக வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்திற்கு உதவுவதற்கான எவ்வித கட்டமைப்புக்களும் இருக்கவில்லை. தற்போது அவ்வெற்றிடத்தை காணாமல்போனோர் பற்றி அலுவலகம் பூர்த்தி செய்துள்ளது. இவ்வலுவலகம் ஸ்தாபிக்கப்படும் வரை காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினர் வழங்கிய முறைப்பாடுகளை உரிய அரச நிறுவனங்கள் எவையும் பெரியளவில் கருத்திற் கொள்ளவில்லை.

என்னுடைய கணவர் காணாமலாக்கப்பட்ட போது, நான் பொலிஸில் முறைப்பாடு செய்வதற்காகச் சென்றேன். அப்போது அவர்கள் எனது கணவருக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதி இருக்கிறதா என்று கேட்டார்கள். உண்மையில் அரச நிறுவனங்கள் எமக்கு எது தேவை என்பதைப் புரிந்துகொள்ளவில்லை. எம்மைப் பார்த்துப் பரிதாபப்படத் தேவையில்லை. எமக்கு பதிலும், தீர்வுமே வேண்டும் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!