தேர்தலை கண்காணிக்க ஐரோப்பிய ஒன்றிய, கொமன்வெல்த் பிரதிநிதிகள்

சிறிலங்கா அதிபர் தேர்தலைக் கண்காணிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கொமன்வெல்த் கண்காணிப்பாளர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அனுமதி அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரசியல் கட்சிகளின் செயலர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய அனுப்பியுள்ள கடிதத்தில், அதிபர் தேர்தலைக் கண்காணிப்பதற்கு கொமன்வெல்த் கண்காணிப்புக்குழுவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஐரோப்பிய ஒன்றியமும் தமது கண்காணிப்பாளர்களை அனுப்ப விருப்பம் தெரிவித்துள்ளதாகலும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

அதேவேளை, உள்ளூர் கண்காணிப்பு அமைப்புகளான, பவ்ரல், தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் நிலையம், ஆகியவற்றுக்கும் தேர்தல் கண்காணிப்பு பணிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, ஆசிய தேர்தல் அதிகாரிகள் சங்கமும், தமது கண்காணிப்பாளர்களை அனுப்பவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!