பிக்குகளை சீண்டுகிறார்கள் – கொந்தளிக்கிறார் கோத்தா!

gotaநாட்டில் பௌத்த பிக்குகளுக்குத் தனி மரியாதை உண்டு. அவர்களை அவமதித்து தமிழ் அரசியல்வாதிகளின் பின்புலத்துடன் செயற்படும் சட்டத்தரணிகளின் நடவடிக்கையினால்தான் முல்லைத்தீவு – நீராவியடியில் பதற்றம் ஏற்பட்டது என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

“இறந்த விகாராதிபதி கொலம்பே மேதாலங்கார தேரரின் உடலை அமைதியான ஓர் இடத்தில் தகனம் செய்யவே பிக்குகள் தீர்மானித்திருந்தார்கள். ஆனால், தமிழ் அரசியல்வாதிகளின் பின்புலத்துடன் செயற்படும் சட்டத்தரணிகள் பிக்குகளை அவமதிக்கும் வகையில் செயற்பட்டார்கள்.

இந்தச் சட்டத்தரணிகள்தான் ஆலய நிர்வாகத்தினரையும் நீதிமன்றத்துக்கு இழுத்துச் சென்று இந்த விவகாரத்தை ஊதிப்பெருக்கினார்கள். இது தேவையில்லாத நடவடிக்கை. அதற்காக நீதிமன்றத்தின் உத்தரவைவோ – தீர்ப்பையோ நான் விமர்சிக்க விரும்பவில்லை. களத்தில் என்ன நடந்தது என்று உண்மையில் எனக்குத் தெரியாது.

எனினும், அண்மைக் காலங்களில் பிக்குகளை அவமதிக்கும் வகையில் – அவர்களைச் சீண்டும் வகையில் சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது” என தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!