பிரித்தானியா இளவரசி மெர்க்கல் தனது முதல் கணவரை பிரிந்தது எதற்காக?

பிரித்தானியா அரச குடும்பத்தின் மருமகளாகிவிட்டதால் தான் ஒரு நடிகையாக இருந்தபோது வாழ்ந்த வாழ்க்கையை தவிர்த்து, இனி அரச குடும்பத்தின் விதிமுறைகளை கடைபிடித்து வாழ்வதற்கு மெர்க்கல் தயாராகிவிட்டார். காலம் காலமாக அரச குடும்பத்தினர் பின்பற்றிவரும் வரையறைக்குள் வாழப்போகும் மெர்க்கல், தனது முதல் கணவரை எதற்காக பிரிந்தார் என்பதற்கான தகவல் வெளியாகியுள்ளது.

திரைப்பட தயாரிப்பாளரான Trevor Engelson – உடன் 5 ஆண்டுகள் டேட்டிங்கில் இருந்துள்ளார் மெர்க்கல். 2004 ஆம் ஆண்டில் இருந்து டேட்டிங்கில் இருந்த இவர்கள், 2010 ஆம் ஆண்டு நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர். 2011 ஆம் ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்த இவர்கள் 2013 ஆம் ஆண்டு விவாகரத்து செய்துகொண்டனர். அதன்பின்னர் தான் ஹரியின் நட்பு மெர்க்கலுக்கு கிடைத்துள்ளது,

ஆரம்பத்தில் டேட்டிங்கில் இருந்த இவர்கள், பெண்ணியம், சமூக நிலவரங்கள் குறிந்து அவ்வப்போது மெர்க்கல் பேசுவது, ஹரியின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியதையடுத்து திருமணத்தில் இணைந்துள்ளனர். ஹரியை திருமணம் செய்துகொள்ளப்போவது உறுதியான பின்னர், மெர்க்கல் தனது முன்னாள் காதலர் அளித்த நிச்சயதார்த்த மோதிரம் மற்றும் வைரத்தால் செய்யப்பட்ட திருமண மோதிரங்களை தபாலில் அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது. 5 ஆண்டுகள் டேட்டிங்கில் இருந்த இவர்கள் திருமணம் செய்துகொண்ட 2 ஆண்டுகள் கழித்து பிரிவதற்கு காரணம் மெர்க்கலின் இடமாற்றமே, கணவர் அமெரிக்காவில் இருக்கையில், மெர்க்கல் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்காக அவ்வப்போது கனடாவிற்கு பயணிப்பதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார்.

இதனால் இவர்கள் இருவருக்குள்ளும் அடிக்கடி பிரச்சனை எழுந்த காரணத்தால், அது நீண்ட பிரிவாக வழிவகுத்தது. அதிகமாக கனடாவிலேயே மெர்க்கல் இருந்ததால் தனித்தனியே வாழ ஆரம்பித்த இவர்கள், பின்னர் நிரந்தரமாக பிரிந்துவிடலாம் என விவாகரத்து செய்துகொண்டனர். மெர்க்கலின் இரண்டாவது திருமணம் குறித்து ஊடகங்கள் தன்னை சுற்றிவளைத்து கேள்வி கேட்பார்கள் என்பதால், முதல் கணவர் அமெரிக்காவில் இருந்து வேறு இடத்திற்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!