தமிழ் அரசியல் தலைமை விட்ட தவறை தமிழ் மக்கள் உணரத் தலைப்பட்டுள்ளனர்

இனப் பிரச்சினைக்கான தீர்வு சாத்தியப்படா தென்பது இப்போது நிரூபணமாகிவிட்டது.
இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணுதல் என்ற விடயத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் தூரத்தில் எறிந்து விட்டார் என்பதை அவரின் அண்மைக்கால உரை களில் இருந்து உணர முடியும்.

ஜனாதிபதி மைத்திரியின் இந்தப் போக்கு உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்குப் பின்பாக வும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையை அடுத்தும் வெளிப்படத் தலைப்பட்டுள்ளது.

இனப்பிரச்சினைக்கான தீர்வில் சமஷ்டி உண்டு என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் மற்றும் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் துரைராஜ சிங்கம் ஆகியோர் அடிக்கடி கூறிவந்தனர்.

உண்மையில் புதிய அரசியலமைப்பில் சமஷ்டி என்ற பேச்சுக்கே இடமில்லை. இருந் தும்; இல்லாததனை இருப்பதாகக் கூறியதன் விளைவாக,
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ தரப்பினர் மிக வேகமான பிரசாரத்தை தென் பகுதியில் மேற்கொண்டனர்.

புதிய அரசியலமைப்பு தமிழ் மக்களுக்கு எல்லா உரிமைகளையும் எல்லா அதிகாரங் களையும் வழங்குகிறது என அவர்கள் செய்த பிரசாரம் மகிந்த தரப்புக்கு ஒரு வெற்றியைக் கொடுக்க, ஜனாதிபதி மைத்திரி அதிர்ந்து போனார்.
இது தவிர, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை யின் வாக்கெடுப்பின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதமர் ரணிலுக்கு ஆதரவாக வாக்களிக்க,

அது ஜனாதிபதி மைத்திரிக்கு கூட்டமைப்பு மீதிருந்த சந்தேகத்தை உறுதிப்படுத்தியது.
அதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பிரதமர் ரணிலின் பக்கம் நிற்கிறார்கள். தன்னை அவர்கள் கண்டு கொள்வதில்லை என்ற ஜனாதிபதி மைத்திரியின் சந்தேகம் உறுதிபட;
அவர் இப்போது தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பை ஒரு பொருட்டாகக் கருதுவதில்லை என்பதை அவதானிக்க முடிகிறது.

அதேநேரம் தமது சுயலாப அரசியலுக்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் மிக நெருக்கமாக இருந்த கூட்டமைப்பினர் தமது சொந்த, சுயவிவகாரங்களுக்காக பிரதமரிடம் உதவி பெற்றதால் இப்போது எந்தக் கோரிக்கை களையும் தமிழ் மக்களின் நலன் கருதி முன் வைக்க முடியாதுள்ளது.
ஆக, இறுக்கமான அரசியல் நிலைமை கூட் டமைப்புக்கும் அரசுக்கும் இடையில் ஏற்பட்டு விட்டது.

இதன்காரணமாக ஆனந்தசுதாகரனின் விடுதலைகூட, இன்னமும் சாத்தியப்படவில்லை.
இதுதவிர, அடுத்த தீபாவளிக்கு முன் இனப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைத்து விடும் என்று கூறிய இரா.சம்பந்தர் ஐயா, அடுத்த தீபாவ ளிக்கு என்ன சொல்லப் போகிறார் என்பதற்கு முன்பாக,

தமிழ் அரசியல் தலைமை விட்ட தவறு களை – திருகுதாளங்களை தமிழ் மக்கள் முழுமையாக உணரத் தலைப்பட்டுள்ளனர் என்பதுதான் உண்மை.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!