நாங்கள் எல்லை தாண்டினால் விளைவுகள் மோசமாக இருக்கும்..!” – இராணுவ தளபதி எச்சரிக்கை

இந்திய எல்லைக்குள் ஊடுருவ காத்திருக்கும் பயங்கரவாதிகளை பாகிஸ்தான் கட்டுப்படுத்தி வைக்க வேண்டும். வான் வழியாகவோ அல்லது தரை வழியாகவோ அல்லது இரு வழிகளிலுமோ நாம் எல்லை தாண்டிச் சென்றால், அதன் விளைவுகள் மோசமாக இருக்கும் என்று இந்திய இராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்த பிபின் ராவத் கூறுகையில்,

பால்கோட்டில் பயங்கரவாத முகாம்கள் மீண்டும் செயல்பட துவங்கி இருக்கலாம். ஆனால், காஷ்மீரின் சூழலை சீர்குலைக்க பாகிஸ்தானை இனி ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்பதில் இந்தியா தெளிவாக உள்ளது.

இந்திய எல்லைக்குள் ஊடுருவ காத்திருக்கும் பயங்கரவாதிகளை பாகிஸ்தான் கட்டுப்படுத்தி வைக்க வேண்டும். இனியும் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்க முடியாது. வான் வழியாகவோ அல்லது தரை வழியாகவோ அல்லது இரு வழிகளிலுமோ நாம் எல்லை தாண்டிச் சென்றால், அதன் விளைவுகள் மோசமாக இருக்கும்.

370 பிரிவு நீக்கப்பட்ட பிறகு காஷ்மீரில் பயங்கரவாதத்தை பரப்புவது பற்றி பாகிஸ்தான் வெளிப்படையாக கூறி வருகிறது. அணுஆயுதம் என்பது குற்றங்களை தடுப்பதற்காகத்தான். அவர்களிடம் போர் புரிய ஆயுதங்கள் ஏதும் இல்லை. ஒருவேளை, இந்தியாவை தாக்க அவர்கள் அணு ஆயுததத்தை பயன்படுத்தினால், அதை உலக நாடுகள் பார்த்துக் கொண்டிருக்காது.

பொதுவாக, இந்திய எல்லைக்குள் ஊடுருவ அதிகாலை 2 மணி முதல் 5 மணி வரையிலான காலத்தையே பயங்கரவாதிகள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

ஆனால், ஊடுருவலுக்கும் எல்லை தாண்டிய தாக்குதலுக்கும் இந்திய இராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!