அகிம்சையே வலிமையான ஆயுதம் என்பதை உணர்த்திய காந்தி

அகிம்­சையே ஆயு­தங்­களில் வலி­மை­யானது. சத்­தியம் வாழ்வில் நிலை­யா­னது. உயர்­வா­னது என்­பதை அனை­வ­ருக்கும் உணர்த்­தி­யவர் காந்­தி­ய­டிகள். பத­வி­களை வகிக்­காமல் உலக அளவில் புகழ்பெற முடியும் என்று அவர் நிரூ­பித்தார். மகாத்மா என்ற பெரு­மைக்கு உரிய ஒரு­வ­ராக காந்தி அண்ணல் மட்­டுமே விளங்­கு­கின்றார். எனது வாழ்க்­கையே எனது செய்தி என்று கூறும் அவ­ரது வாழ்க்கை வர­லாறு எல்­லோ­ருக்கும் ஒரு சிறந்த பாட­மாக விளங்­கு­கின்றது.

தேச­பிதா என்­று­ அ­னை­வ­ராலும் அன்­புடன் அழைக்­கப்­படும் காந்­திஜி 1869 ஆம்­ ஆண்டு அக்­டோபர் 2 ஆம் திகதி குஜ­ராத் ­மாநி­லத்தில் போர்­பந்தர் என்னும் இடத்தில் பிறந்தார். இவ­ருக்குப் பெற்றோர் வைத்த பெயர் மோகன்தாஸ் கரம்­சந்தி காந்தி என்­ப­தாகும்.

காந்­திஜி தனது தொடக்கக் கல்­வியை ராஜ்கோட் என்னும் இடத்தில் மேற்­கொண்டார். மெட்­ரி­கு­லேஷன் படிப்பில் தேர்ச்சி பெற்­ற­பின்பு பவ­நகர் என்னும் இடத்தில் கல்­லூரிப் படிப்பைத் தொடங்­கினார்.

காந்­தி­ஜிக்கு இள­மை­யி­லேயே சட்டம் படிக்­க ­வேண்டும் என்ற ஆசை இருந்­தது. அதற்­காக இங்­கி­லாந்து செல்ல ஆசைப்­பட்டார். காந்­தியை வெளிநாட்­டுக்கு அனுப்ப அவ­ரு­டை­ய­ தா­யா­ருக்கு சிறிதும் மன­மில்லை. நிலை­மையைப் புரிந்­து­கொண்­ட­ காந்­திஜி தாயா­ருக்கு வெளிநாட்டில் அசைவ உணவு சாப்­பிட மாட்டேன். மது அருந்த மாட்டேன். வேறு பெண்­க­ளுடன் தொடர்பு கொள்­ள­மாட்டேன் என்ற மூன்று உறு­தி­மொ­ழி­களை அளித் தார். அதைக் கடைசிவரை கடைப்­பி­டித்தார். 1888 ஆம் ஆண்டு லண்டன் சென்றார். அங்­கு­ நான்கு வரு­டங்கள் படித்து பாரிஸ்டர் பட்­டம்­ பெற்றார்.

பாரிஸ்டர் பட்டம் பெற்ற காந்­திஜி ராஜ்கோட், மும்பை ஆகிய இரு இடங்­களில் வக்கீல் தொழிலைச் செய்தார். வியா­பாரக் கம்­பனி அழைத்தன் பேரில் தென்­னா­பி­ரிக்­கா­வுக்குச் சென்றார். அங்கு வெள்ளையர்கள் ஆட்சி நடை­பெற்­றுக்­கொண்­டி­ருந்­தது. அவர்கள் இந்­தி­யர்­களை அடி­மை­யாக நடத்­தினர். அங்கு வாழ்ந்த இந்­தி­யர்­க­ளுக்­காக காந்­திஜி வாதா­டினார். எனவே அவரை வெள்ளைக்­கா­ரர்கள் கூலி­களின் வக்கீல் என்று கேலி செய்­தனர்.

தென்­னா­பி­ரிக்­காவில் ஒரு­முறை ரயில் முதல் வகுப்பு பெட்­டியில் காந்தி பயணம் செய்தார். அதே பெட்­டியில் ஒரு வெள்ளையனும் பயணம் செய்தான். அவன் காந்­தியை இந்­தியன் எனத் தெரிந்­து­கொண்டான். உடனே பெட்­டியை விட்டு இறங்கும்படி சொன்னான். காந்­திஜி தனது பய­ணச்­சீட்டைக் காட்டி இறங்க மறுத்தார். வெள்ளையன் காந்­தி­யி­னு­டைய பெட்டி படுக்­கை­களைத் தூக்கி வெளியே எறிந்தான்.

அப்­போ­தைய வெள்ளையர்­களின் நிற­வெறியைப் புரி­ந்­து­கொண்டார் காந்தி.

1906 ஆம் ஆண்டு காந்தி இந்­தி­யர்­களைப் பிரிவுபடுத்தும் கறுப்பு சட்­டத்தை எதிர்த்தார். இதனால் தென்­னா­பி­ரிக்க அரசு அவரைக் கைது செய்­தது. 1920 ஆம் ஆண்டு ஒத்­து­ழை­யாமை இயக்கத்தைத் தொடங்­கினார். அந்த இயக்­கத்­தின்­படி ஆங்­கி­லே­யரின் சட்ட திட்­டங்­க­ளை எதிர்க்­க­வேண்டும். ஆங்­கில அரசு அளித்த சேர் பட்டம் மற்றும் வேறு பட்­டங்­களை விட்­டு­வி­ட­வேண்டும். கல்­லூரி, அலு­வ­ல­கங்­களில் பணி­யாற்­றுவோர் தங்கள் வேலையை விட்­டு­வி­ட­வேண்டும் என்று அறி­விக்­கப்­பட்­டது. இந்தப் போராட்டம் கார­ண­மாக காந்­தி­ கைது செய்­யப்­பட்டார்.

ஆங்­கில அரசு உப்­புக்கு வரி விதித்­ததைக் கண்­டித்து 1930 ஆம் ஆண்டு மார்ச் 12 ஆம் திகதி தண்டி என்னும் இடத்தில் உப்பு அள்ள முடிவு செய்தார். அதற்­காக தண்டி யாத்­திரை மேற்­கொண்டார் . இதனால் 1930 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம்­ தி­கதி கைது­ செய்­யப்­பட்டார்.

1931 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4 ஆம் திகதி இங்­கி­லாந்தில் நடை­பெற்ற வட்­ட­மேசை மாநாட்டில் காந்தி கலந்­து­கொண்டார். 1942 ஆம் ஆண்டு 9 ஆம் திகதி வெள்ளையனே வெளியேறு இயக்­கத்தைத் தொடங்­கினார். இதன் கார­ண­மாக காந்தி, நேரு, பட்­டேல் உட்­பட பல்­வேறு தலை­வர்கள் கைது செய்­யப்­பட்­டனர். காந்­திஜி ஆகாகான் மாளிகைச் சிறையில் அடைக்­கப்­பட்டார்.

1940 ஆம் ஆண்டு அக்­டோபர் மாதம் தனியார் போராட்­டத்தைத் தொடங்­கினார். இதன்­படி ஆங்­கில அரசின் முயற்­சி­க­ளுக்குப் பொரு­ளு­தவி செய்­யக்­கூ­டாது ஆள்­பலம் சேர்க்கக்­கூடாது என்று கூறினார். ஆங்­கி­லேய அரசு இந்­தி­யாவை இரண்­டாகப் பிரித்­தாளும் சூழ்ச்­சி­யைச் செய்­தது. இந்­தியா, பாகிஸ்தான் என்று பிரித்து இந்­தி­யா­வுக்குச் சுதந்­திரம் வழங்­கு­வது என்று முடிவு செய்­தது.இனக்­க­ல­வ­ரங்­கள் ஏற்பட்­டன. அமை­தியை உரு­வாக்க விரும்­பிய காந்தி நவ­காளி யாத்­தி­ரையை மேற்­கொண்டார் 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி இந்­தியா சுதந்­திரம் அடைந்தது.

இந்­திய நாட்டின் நன்­மைக்­காக இந்து – முஸ்­லிம் ஒற்­றுமை, தீண்டா­மையை ஒழித்தல், மது விலக்கு ஒப்­பந்தம், மகளிர் முன்­னேற்றம், தொழுநோய் ஒழித்தல் போன்ற திட்­டங்­களை அறி­வித்தார்.

அகிம்சை வழி நடந்த காந்­திஜி 1948 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 30 ஆம் திகதி சுட்­டுக்­கொல்­லப்­பட்­டாலும் அவரின் அகிம்சை, உண்­ணா­நோன்பு, சத்­தி­யம் ­போன்­றவை என்றும் நிலைத்து நிற்­கின்­றன. அவ­ரு­டைய நினை­வாக காந்தி கிராமம் அமைக்­கப்­பட்­டுள்­ளது. காந்தி கிரா­மிய பல்­க­லைக்­க­ழகம் செயற்­பட்டு வருகின்றது. சென்னை கிண்­டியில் காந்­தி­மண்­டபம் அமைக்­கப்­பட்­டுள்­ளது. இந்­தி­யாவில் மட்­டு­மன்றி உலகின் பல நாடு­க­ளிலும் காந்­தியின் உருவச்சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. உலகப் பேரொளி உத்தமர் காந்தியின் கொள்கைகளால் பெருமளவான மக்கள் ஈர்க்கப்பட்டுள்ளனர். காந்தியக் கோட்பாடு உலகம் உள்ளளவும் நிலைபெறும் ஒன்றாக மாறிவிட்டது. அண்ணலின் 150 ஆவது பிறந்த தினமாகிய இன்றைய நாளில் அவர் வழி நடக்கவும் அவரின் நிர்மாணத்திட்டங்களைச் செயற்படுத்தவும் உறுதிபூணுவோமாக.

எம்.ஷாந்தன் சத்தியகீர்த்தி

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!