இந்திய இளைஞனுக்கு அடித்த அதிர்ஷடம்…!

வெளிநாட்டில் இந்தியாவைச் சேர்ந்த நபருக்கு 50 கோடிக்கு மேல் லாட்டரியில் பரிசு விழுந்துள்ளதால், அவர் இன்ப அதிர்ச்சியில் உள்ளார்.இந்தியாவின் கர்நாடாகா மாநிலத்தை சேர்ந்தவர் Mohammed Fayaz. 24 வயதான இவர் தற்போது தன்னுடைய குடும்ப சூழ்நிலை காரணமாக மும்பையில் கணக்காளராக பணியாற்றி வருகிறார்.இந்நிலையில் இவர் சமீபத்தில் வாங்கிய ஆன்லைன் லட்டாரி டிக்கெட்டிற்கு Dh12 மில்லியன்(இலங்கை மதிப்பில் 59,26,39,250 கோடி ரூபாய்) விழுந்துள்ளது.

இதைப் பற்றி அறிவிக்க லாட்டரி நிர்வாகம் நான்கு முறை தொடர்பு கொண்ட போது, அவர் போனை எடுக்கவில்லை, அதன் பின் ஐந்தாவது முறை அவருடைய போனை தொடர்பு கொண்ட போது, இந்த மகிழ்ச்சியான செய்தியை கேட்டு, அவர் திக்கு முக்காடி இன்ப அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளார்.இதனால் இந்த அதிர்ஷ்டம் பற்றி அவரிடம் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று பேட்டி எடுத்துள்ளது. அப்போது அவர், என்னுடைய தந்தை சவுதி அரேபியாவில் 12 ஆண்டுகளாக வேலை பார்த்திருக்கிறார்.

ஆனால் என்னுடைய பெற்றோர் இரண்டு பேருமே சிறுநீரக பிரச்சனை நோயினால் இறந்துவிட்டனர். இதனால் நான் என் தான் என்னுடைய இரண்டு சகோதரிகளை பார்த்து கொள்ள வேண்டியிருந்தது.அதில் மூத்த சகோதரிக்கு திருமணம் ஆகிவிட்டது. இன்னொருத்தி இருக்கிறாள். இப்போது நான் மும்பை வந்து ஒரு வருடங்களுக்கு மேல் ஆகிறது.அப்படி இருக்கும் போது தான் என்னுடைய நண்பன் ஆன்லைனில் லாட்டரி டிக்கெட் வாங்குவதைப் பற்றி கூறினான். ஆனால் அப்போது என்னால் லாட்டரில் வாங்க முடியவில்லை.

அதன் பின் கடந்த செப்டம்பர் மாதம் லாட்டரி டிக்கெட் வாங்கினேன். அதன் மூலம் இப்போது அதிர்ஷ்டக்காரரான நிற்கிறேன். என்னால் இதை நம்ப முடியவில்லை, உடனடியாக நேற்றிரவு ஆன்லைனின் உண்மையா என்று பார்த்தேன்.இதைப் பற்றி என் நண்பனிடம் கூறினேன், அவன் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறான். கிடைத்திருக்கும் பணத்தை வைத்து நான் விற்ற இடத்தை மீண்டும் வாங்க முயற்சி செய்வேன், அதுமட்டுமின்றி வீடு கட்டிக் கொண்டிருக்கிறோம், அதை முடிக்க வேண்டும்.

முடிந்தளவிற்கு இந்த பணத்தில் சிறிதளவாவது தொண்டு நிறுவனத்திற்கு கொடுத்து உதவி செய்வேன். நான் இதுவரை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றதில்லை, ஆனால் முதல் முறையாக அடுத்த லாட்டரி டிக்கெட் பரிசு விழுந்தற்கான காசோலையை வாங்க செல்கிறேன் என்று கூறியுள்ளார்.மேலும் Mohammed Fayaz ஆன்லைனில் Big Ticket raffle draw அதாவது Abu Dhabi சர்வதேச விமானநிலையத்தில் விற்கும் லாட்டரி டிக்கெட்டினை வாங்கியுள்ளார். இந்த லாட்டரி டிக்கெட்டை ஆன்லைனிலோ அல்லது குறித்த விமானநிலையத்தில் மட்டுமே வாங்க முடியும் என்று அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!